பணிக்கு வராமல் சம்பளம் : உ.பி., அதிகாரி 'சஸ்பெண்ட்'

Added : அக் 01, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
லக்னோ, :உத்தர பிரதேசத்தில் பணிக்கு வராமல் ஆறு மாதமாக சம்பளம் வாங்கிய தலைமை மருத்துவ அதிகாரியை, துணை முதல்வர் பிரிஜேஸ் மிஸ்ரா அதிரடியாக, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார். உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அம்ரோஹா மாவட்டத்தில் டாக்டர் இந்து பாலா சர்மா என்பவர், தலைமை மருத்துவ அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். துணை முதல்வர்
பணி, சம்பளம், உபி, அதிகாரி சஸ்பெண்ட்

லக்னோ, :உத்தர பிரதேசத்தில் பணிக்கு வராமல் ஆறு மாதமாக சம்பளம் வாங்கிய தலைமை மருத்துவ அதிகாரியை, துணை முதல்வர் பிரிஜேஸ் மிஸ்ரா அதிரடியாக, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார். உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அம்ரோஹா மாவட்டத்தில் டாக்டர் இந்து பாலா சர்மா என்பவர், தலைமை மருத்துவ அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். துணை முதல்வர் பிரிஜேஸ் மிஸ்ரா சமீபத்தில் இங்கு ஆய்வு செய்தார்.


latest tamil news


இதில் இந்து பாலா சர்மா, கடந்த ஆறு மாதங்களாக பணிக்கு வராமல் சம்பளம் பெற்றது தெரிய வந்தது. மேலும், வருகைப் பதிவேட்டில் பொய்யாக அவருக்காக வேறு சிலர் கையெழுத்திட்டிருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை அதிரடியாக பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்தும், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படியும் துணை முதல்வர் பிரிஜேஸ் மிஸ்ரா உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்படி போலீசாருக்கு, துணை முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (7)

sankar - சென்னை,இந்தியா
01-அக்-202214:12:04 IST Report Abuse
sankar மத்த எதிர்க்கட்சியை விட படுமோசம்.
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
01-அக்-202212:48:34 IST Report Abuse
sankar கட்சி ஆட்சியைவிட படுமோசம். உ.பின்னா சொல்லணுமா?
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
01-அக்-202211:57:53 IST Report Abuse
jayvee இதே போல, பாராளுமன்றத்திற்கும் சட்டசபைகளுக்கும் வராமலே சம்பளம் பெரும் MP க்கள் மற்றும் MLA க்களின் பதவியை நீக்கும் அதிகாரத்தினை தேர்தல் கமிஷனுக்கு கொடுக்கவேண்டும்.. அவர்களின் சம்பளம் மற்றும் சலுகை கட்டணங்களை மீண்டும் வசூலிக்கவும் வேண்டும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X