கெஜ்ரிவாலுக்கு விருந்து வைத்த ஆட்டோ டிரைவர் பா.ஜ.வில் ஐக்கியம்

Added : அக் 01, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
ஆமதாபாத்: குஜராத் சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் நடக்கவுள்ள தேர்தலையொட்டி. கடந்த 12-ம் தேதி இரு நாள் பயணமாக குஜராத் வந்திருந்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆமதாபாத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது விக்ரம் தண்டானி என்ற ஆட்டோ டிரைவர் கெஜ்ரிவாலை , சந்தித்து இன்று இரவு தனது வீட்டிற்கு உணவு அருந்த வருமாறு அழைப்பு விடுத்தார். இதை ஏற்று அன்று இரவு 8
கெஜ்ரிவாலுக்கு விருந்து வைத்த ஆட்டோ டிரைவர்  பா.ஜ.வில் ஐக்கியம்

ஆமதாபாத்: குஜராத் சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் நடக்கவுள்ள தேர்தலையொட்டி. கடந்த 12-ம் தேதி இரு நாள் பயணமாக குஜராத் வந்திருந்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆமதாபாத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது விக்ரம் தண்டானி என்ற ஆட்டோ டிரைவர் கெஜ்ரிவாலை , சந்தித்து இன்று இரவு தனது வீட்டிற்கு உணவு அருந்த வருமாறு அழைப்பு விடுத்தார்.

இதை ஏற்று அன்று இரவு 8 மணியளவில், ஆமதாபாத்தில் உள்ள காட்லோடியா என்ற பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் வீட்டிற்கு சென்று இரவு உணவு அருந்தினார் கெஜ்ரிவால்.

இந்நிலையில் அதே ஆட்டோ டிரைவர் பா.ஜ. நிர்வாகிகளுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஆட்டோ டிரைவரிடம் கேட்டதற்கு இரவு உணவு அருந்த கெஜ்ரிவாலை நான் அழைக்கவில்லை. ஆட்டோ சங்கத்தினர் அழைக்குமாறு என்னிடம் தெரிவித்ததால் கெஜ்ரிவாலை அழைத்தேன். அதற்காக நான் ஆம் ஆத்மி கட்சி அனுதாபி என நினைக்க வேண்டாம். எனக்கு பிடித்த தலைவர் பிரதமர் மோடிதான். பா.ஜ.விற்கு தான் எனது ஓட்டு என கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kannan - Ramanathapuram,இந்தியா
01-அக்-202211:43:19 IST Report Abuse
Kannan .. அந்த ஆட்டோ டிரைவர் யார் வீட்டிலும் போய் சாப்பிட வில்லை. வீட்டுக்கு வந்த விருந்தாளிகளுக்கு உணவு இட்டுள்ளார்.. அதற்காக விருந்தாளிகளின் கட்சியை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
01-அக்-202204:34:22 IST Report Abuse
Girija இவன் ஆட்டோ டிரைவர் இல்லை, வருங்கால நாகராஜா சோழன் M A. படத்தில் மணிவண்ணன் அவரிடம் அல்வா வாங்கி சாப்பிட்டார், நிஜத்தில் உருவ ஒற்றுமை மோடியுடன் ஒத்து போகிறது. இதுமாதிரியான ஆட்களை பி ஜெ பி யில் சேர்த்து விளம்பரம் செய்வது கட்சிக்கு தான் அசிங்கம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X