ஆற்றில் மாயமானவரை தேடும் பணி தீவிரம்

Added : அக் 01, 2022 | |
Advertisement
காட்டுமன்னார்கோவில் : கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடித்தபோது காணாமல் போனவரை, தீயணைப்பு வீரர்கள் நேற்று 2ம் நாளாக தேடினர். மாயமானவரை முதலை இழுத்துச் சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடக்கரை கிராமமான எய்யலூர் ஊராட்சிக்குட்பட்ட மேலப்பாதியை சேர்ந்தவர் சங்கரன், 48. இவர், அதே ஊரை சேர்ந்த 3 பேருடன் நேற்று முன்தினம் காலை
ஆற்றில் மாயமானவரை தேடும் பணி தீவிரம்



காட்டுமன்னார்கோவில் : கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடித்தபோது காணாமல் போனவரை, தீயணைப்பு வீரர்கள் நேற்று 2ம் நாளாக தேடினர். மாயமானவரை முதலை இழுத்துச் சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடக்கரை கிராமமான எய்யலூர் ஊராட்சிக்குட்பட்ட மேலப்பாதியை சேர்ந்தவர் சங்கரன், 48. இவர், அதே ஊரை சேர்ந்த 3 பேருடன் நேற்று முன்தினம் காலை கொள்ளிடத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.



ஆற்றில் தண்ணீர் வேகம் அதிகமாக இருந்த நிலையில், மீன் பிடித்துக் கொண்டிருந்த சங்கரனை திடீரென காணவில்லை. அவருடன் சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து, கிராம மக்களுக்கும், காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.தீயணைப்பு நிலைய அலுவலர் கொளஞ்சிநாதன் தலைமையில் வீரர்கள், தண்ணீரில் மாயமான சங்கரனை தேடி வந்தனர். நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு துவங்கிய தேடுதல் வேட்டை மாலை 7:00 மணி வரை நீடித்தது. இருந்தபோதும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தேடுதல் பணி நேற்று காலை மீண்டும் துவங்கியது. ஆனாலும், சங்கரன் கிடைக்கவில்லை.சங்கரன் மாயமான இடம், முதலைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாக அறியப்படுவதால், முதலை இழுத்துச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X