புதுச்சேரி : மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின், மாநில வாழ்வாதார இயக்கத்தின் கீழ், வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்உணவுத் திருவிழா நடந்தது.விழாவில்,வில்லியனுார் பகுதி அங்கன்வாடி ஊழியர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள், சிறுதானிய பாரம்பரிய திட, திரவ உணவுகள், முருங்கை கீரையில் உணவுகள் தயாரித்து காட்சிக்கு வைத்தனர்.
அதில், சிறந்த உணவுகளை ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் தேர்வு செய்தனர். தேர்வு செய்யப்பட்ட உணவுகளுக்கு வட்டார வளர்ச்சி அதிகாரி மோகன்குமார் பரிசு வழங்கினார்.இதில், அலுவலக கண்காணிப்பாளர் பரந்தாமன், இணை வட்டார வளர்ச்சி அதிகாரி கலைமதி, விரிவாக்க அதிகாரி ரெங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.