பள்ளி அருகே கஞ்சா விற்பனை வில்லியனூரில் 4 வாலிபர்கள் கைது

Added : அக் 01, 2022 | |
Advertisement
வில்லியனுார் : வில்லியனுார் அருகே பள்ளி அருகே கஞ்சா விற்ற நான்கு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.வில்லியனுார் அடுத்த பொறையூர் நான்கு ரோடு சந்தப்பில் உள்ள தனியார் பள்ளி அருகே சிலர் கஞ்சா விற்பதாக வில்லியனுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் -இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் எழில், சங்கர் ஆகியோர் விரைந்து சென்ற, பள்ளி
பள்ளி அருகே கஞ்சா விற்பனை  வில்லியனூரில் 4 வாலிபர்கள் கைது



வில்லியனுார் : வில்லியனுார் அருகே பள்ளி அருகே கஞ்சா விற்ற நான்கு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.வில்லியனுார் அடுத்த பொறையூர் நான்கு ரோடு சந்தப்பில் உள்ள தனியார் பள்ளி அருகே சிலர் கஞ்சா விற்பதாக வில்லியனுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் -இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் எழில், சங்கர் ஆகியோர் விரைந்து சென்ற, பள்ளி அருகே கஞ்சா விற்றுக் கொண்டிருந்த நான்கு வாலிபர்களை மடக்கி பிடித்தனர்.



அவர்கள் மூன்று பொட்டலங்களில் வைத்திருந்த 1,050 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில், பொறையூர் பேட் குருபஞ்சாராவ் மகன் யோகேஷ்(எ)யோகரத்தினம்,19; பன்னீர்செல்வன் மகன் சீனு (எ) சிவராஜன்,19; முருகவேல் மகன் ராதாகிருஷ்ணன்,19; மற்றும் மூலக்கடையை சேர்ந்த செந்தில்குமார் மகன் மேகன் (எ) மேகநாதன்,19; என்பதும், இவர்கள் சென்னை அம்பத்துாரில் இருந்து கஞ்சா வங்கி வந்து விற்பது தெரிய வந்தது.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X