ரூ.80 கோடியில் பேனா சின்னம் வேண்டாமே! விவசாயிகள் கோரிக்கை

Updated : அக் 01, 2022 | Added : அக் 01, 2022 | கருத்துகள் (44) | |
Advertisement
தஞ்சாவூர் : ''பேனா நினைவு சின்னம் அமைக்கும் நிதியில், டெல்டாவில் நெல் சேமிப்பு கிடங்கு அமைத்தால், விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும்,'' என, விவசாயிகள் மனு அளித்தனர்.தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறை தீர் கூட்டம், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நேற்று நடந்தது.அப்போது, விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் மாநில துணைத்தலைவர்
தஞ்சாவூர், பேனா சின்னம், விவசாயிகள், நெல் சேமிப்பு , Thanjavur, pen symbol, farmers, Paddy storage warehouse,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphoneதஞ்சாவூர் : ''பேனா நினைவு சின்னம் அமைக்கும் நிதியில், டெல்டாவில் நெல் சேமிப்பு கிடங்கு அமைத்தால், விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும்,'' என, விவசாயிகள் மனு அளித்தனர்.தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறை தீர் கூட்டம், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நேற்று நடந்தது.அப்போது, விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் மாநில துணைத்தலைவர் சுகுமாறன் தலைமையில், 'தெர்மகோல்' பேனாவுடன் வந்த விவசாயிகள் கோரிக்கை மனுஅளித்தனர்.மனுவில் அவர்கள் கூறியிருந்ததாவது: டெல்டா மாவட்டத்தில், 2021 - 22 ஆண்டு பெய்த மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அதற்கான இன்சூரன்ஸ் இதுவரை விவசாயிகளுக்கு வழங்கவில்லை.latest tamil news


உடனே பயிர் இன்சூரன்ஸ் தொகையை வழங்க வேண்டும்.தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில், நெல் குவிண்டாலுக்கு 2,500 ரூபாயும், கரும்பு டன் ஒன்றுக்கு 4,000 ரூபாயை வழங்குவதாக அறிவித்து விட்டு, தற்போது, வெறும் நுாறு ரூபாய் அறிவித்து உள்ளனர். இந்நிலையில், மறைந்த முதல்வர் கருணாநிதிக்காக, பேனா நினைவு சின்னம் 80 கோடி ரூபாயில் கட்டுவதால், யாருக்கு என்ன பயன்; அதற்கு பதிலாக டெல்டா மாவட்டங்களில் சேமிப்பு கிடங்கு கட்டினால், விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.இந்த கோரிக்கைகளுக்கு, அரசு செவி சாய்க்காவிட்டால், கோட்டை முன் உண்ணாவிரதம் இருப்போம்.இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thangaraj - Erode,இந்தியா
01-அக்-202218:49:02 IST Report Abuse
Thangaraj Each and every government should spend our tax amount for public development instead of these types of project. All the Govt should focus to improve the average annual income of the citizen. Lot of people getting salary below 10 K for a month only. Government increasing tax instead of increasing their salary.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
01-அக்-202217:35:35 IST Report Abuse
sankaseshan அதெப்படி முடியும் கூவத்தில்படகு முதலை விட்டு காசுபார்த்தமாதிரி 93 அடி உயரபேனாவில் மைஊற்றுவதிற்காக செலவுகணக்கு எழுத வேண்டாமா
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
01-அக்-202217:11:01 IST Report Abuse
madhavan rajan விலை பொருட்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்த பிறகு இது போன்ற பொழுது போக்கு அம்சங்களுக்கு நிதி ஒதுக்கலாம். ஆனால் இப்போது இருக்கும் நிதி மந்திரி மேக்கப் படித்தவர் ஆனால் திராவிட அடிமை. அவருக்கு எது அவசியமென்ற சிந்தனை துளியும் கிடையாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X