இது உங்கள் இடம்: 5 ஆண்டு போதாது; நிரந்தர தடை அவசியம்!

Added : அக் 01, 2022 | கருத்துகள் (21) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:கே.நீலகண்டன், நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' என்ற பி.எப்.ஐ., அமைப்புக்கு, ஐந்தாண்டு தடை விதித்து, மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுடில்லியை தலைமையிடமாக வைத்து செயல்படும் இந்த அமைப்பு, பிரிவினைவாத
PFI ban, Popular Front of India, PFI

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:


கே.நீலகண்டன், நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' என்ற பி.எப்.ஐ., அமைப்புக்கு, ஐந்தாண்டு தடை விதித்து, மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுடில்லியை தலைமையிடமாக வைத்து செயல்படும் இந்த அமைப்பு, பிரிவினைவாத கருத்துகளை பரப்பி, நாட்டில் பிளவு ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், இதன் உறுப்பினர்கள் பயங்கரவாத குழுக்களுக்கு நிதி உதவி அளிப்பதுடன், பயிற்சி முகாம்களை நடத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.அதனால், இம்மாதம் 22 மற்றும் 27ம் தேதிகளில், இந்த அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், தேசிய புலனாய்வு நிறுவனத்தினர், அமலாக்கத் துறையினர் மற்றும் மாநில போலீசார் திடீர் சோதனை நடத்தி, 250க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர். இதையடுத்து, பி.எப்.ஐ., அமைப்பை சட்டவிரோதமானது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது; அத்துடன், ஐந்து ஆண்டுகளுக்கு தடையும் விதித்துள்ளது.பயங்கரவாத இயக்கங்களுடன், பி.எப்.ஐ.,க்கு தொடர்புள்ளது என்று ஊர்ஜிதமானதால் தானே, அந்த இயக்கத்திற்கு தடை விதிக்க, மத்திய உள்துறை அமைச்சகம் முடிவெடுத்து உள்ளது. அத்துடன், இந்த அமைப்பு நிரந்தரமாக, நாட்டிலுள்ள எந்த மாநிலத்திலும், வேறு எந்த பெயரிலும் இயங்கி விடக்கூடாது என்றல்லவா உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். அதை விடுத்து, ஐந்து ஆண்டுகளுக்கு தடை மட்டும் என்றால், அந்த தடைக்காலம் முடிந்த பின், இந்த அமைப்பினரும், அதை இயக்கிக் கொண்டிருந்தவர்களும் புனிதமாகி விடுவரா?


latest tamil newsஅரபு நாடுகளில் தொழிற்சாலைகள் நடத்தும் அரபி ஷேக்குகள், ஆரம்ப காலத்தில் நேர்மையாக, இந்திய தொழிலாளர்களுக்கு நிறைவான ஊதியம் கொடுத்து வந்தனர். தமிழகத்தில் இருந்து சென்று, அங்கு நிர்வாகத்தை கைப்பற்றிய சில புல்லுருவிகள், அரபிகள் கொடுத்து கொண்டிருந்த ஊதியத்திற்கு தடை விதித்து, அவர்கள் வழங்கி வந்ததில், மூன்றில் ஒரு பங்கு கொடுத்தால் போதும் என்று, அந்த அரபி ஷேக்குகளை மூளைச்சலவை செய்து, மீதமுள்ளதை இவர்கள் சுரண்ட துவங்கி விட்டனர். இது போன்ற தொழிற்சாலைகளை, இந்திய துாதரகம் கண்டறிந்து, 'பிளாக் லிஸ்ட்' செய்து, அவற்றிற்கு தடை விதித்த போது, தடை விதித்த தொழிற்சாலைகளுக்கு வேறு பெயர் சூட்டி, மீண்டும் இயங்க வைத்ததும், இங்கிருந்து சென்ற அந்த புல்லுருவி மஹானுபாவன்கள் தான். இன்றளவும் அந்த சுரண்டல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.அதுபோல, ஐந்து ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்ட பி.எப்.ஐ., அமைப்பு, வேறு ஒரு புது பெயரை சூட்டிக் கொண்டு இயங்க துவங்கி, மீண்டும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடாது என்பது என்ன நிச்சயம்?நிரந்தர தடை என்றாலே, வேடிக்கை காட்டுவர்; ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும் தடை என்றால் கேட்கவே வேண்டாம். எனவே, இது போன்ற அமைப்புகள் விஷயத்தில் கரிசனம் காட்டாமல், மத்திய அரசு நிரந்தர தடை விதிக்க வேண்டும்; அதுவே, சரியானதாக இருக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-அக்-202221:12:28 IST Report Abuse
சிந்தனை. அருமை. நன்றி.
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
01-அக்-202219:17:35 IST Report Abuse
Sivagiri இன்னும் கூம்பு ஒலி பெருக்கி தடை செய்ய முடியவில்லை
Rate this:
Cancel
thamodaran chinnasamy - chennai,இந்தியா
01-அக்-202217:21:24 IST Report Abuse
thamodaran chinnasamy நாட்டின் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் பாதகம் / வூரு விளைவிக்கும் எவனையும் அவன் ஆயுட்காலம் வரை கடுமையான சிறை தண்டனை விதித்து இத்தைத்திருநாட்டை காக்கவேண்டும் . மேலும் மேற்படி அமைப்புகளுக்கு நிரந்தரத்தடை விதிக்க வழிவகுக்கவேண்டும் .இவர்கள் அனைவருமே சுயநல விஷமிகள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X