இலவச அரிசி டிசம்பர் வரை உண்டு

Updated : அக் 01, 2022 | Added : அக் 01, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை : மத்திய அரசு,இலவச அரிசி வழங்கும் திட்டத்தை, வரும் டிச., வரை நீட்டித்துள்ளதால், தமிழக ரேஷன் கடைகளில், இன்று முதல் வழக்கம் போல் கூடுதல் அரிசியை வாங்கலாம்.நாடு முழுதும் கொரோனா தொற்றுபரவலை தடுக்க, மத்தியஅரசு, 2020 மார்ச்இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தியது. இதனால், மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.இதையடுத்து, 'பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா'
இலவச அரிசி, பிரதான் மந்திரி,  கரீப் கல்யாண்,  அன்ன யோஜனா, அந்தியோதயா ரேஷன் கார்டு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



சென்னை : மத்திய அரசு,இலவச அரிசி வழங்கும் திட்டத்தை, வரும் டிச., வரை நீட்டித்துள்ளதால், தமிழக ரேஷன் கடைகளில், இன்று முதல் வழக்கம் போல் கூடுதல் அரிசியை வாங்கலாம்.நாடு முழுதும் கொரோனா தொற்றுபரவலை தடுக்க, மத்தியஅரசு, 2020 மார்ச்இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தியது.



இதனால், மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.இதையடுத்து, 'பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா' திட்டத்தின் முன்னுரிமை, அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ஏற்கனவே வழங்குவதுடன், கார்டில் உள்ள ஒவ்வொருநபருக்கும் தலா, 5 கிலோ அரிசியை கூடுதலாக வழங்குமாறு, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டது.



latest tamil news


அந்த அரிசி, இந்திய உணவுக் கழகம் சார்பில், மாநில அரசுகளுக்கு இலவசமாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் 18.65 லட்சம் அந்தியோதயா, 93 லட்சம் முன்னுரிமை ரேஷன் கார்டுகள் உள்ளன. அவர்களுக்கு கூடுதல் அரிசி வழங்க, மத்திய தொகுப்பில் இருந்து மாதம், 18 கோடி கிலோ வரை வழங்கப்படுகிறது.கரீப் கல்யாண்திட்டம் படிப்படியாக நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றுடன் முடிவடைய இருந்தது.



அத்திட்டத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு, அதாவது டிச., வரை நீட்டித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.எனவே ரேஷன் கடைகளில் கார்டுதாரர்கள் இன்று முதல் வழக்கம்போல் அந்த அரிசியை வாங்கிபயனடையலாம்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-அக்-202216:27:36 IST Report Abuse
அப்புசாமி இந்த திட்டம் அடுத்த பொதுத்தேர்தல் வரை நீட்டிக்கப்படும். புதுசு புதுசா ஏதாவது காரணம்.
Rate this:
jss - ,
01-அக்-202219:38:58 IST Report Abuse
jssஇல்லையில்லை குஜராத் தேர்தலோடு காலியாயிடும் என்று பட்சி சாஸ்த்திரம் கூறுகிறது். 2024 வரை நீட்டித்தால் வரியை இன்னும் உயர்த்த வேண்டியிருக்கும். அப்படி உயர்த்தினால் உங்கள் விடியல் அரசு எல்லா விலைகளையும் ஏற்றி பழியை மத்திய அரசுமீது தள்ளிவிடும். ஆனால் சில பொருளாதார வல்லுனர்களின் கணக்குப்படி 2024 ல் விலைகள் குறைய வாய்ப்பிருக்கிறது என்கின்றனர்....
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
01-அக்-202213:56:26 IST Report Abuse
Ramesh Sargam ஆமாம் இந்த இலவச அரிசி வழங்குவது மத்திய அரசு என்று மக்களுக்கு தெரியுமா? தெரிந்திருக்கவேண்டும்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
01-அக்-202210:49:41 IST Report Abuse
duruvasar மீண்டும் ஐயோ கொலரானுன்களே கொல்லறாரங்களே கூக்குரல் கேட்க்க ஆரம்பிக்கும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X