பா.ஜ., பிரமுகர் விடுதலை: தொண்டர்கள் வரவேற்பு

Added : அக் 01, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
கோவை : கோவை மாநகர் மாவட்ட பா.ஜ., தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி நேற்று ஜாமினில் வௌியே வந்தார்.தி.மு.க., துணை பொதுச்செயலர் ராஜாவின் பேச்சை கண்டித்து, ஹிந்து முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாலாஜி உத்தம ராமசாமி பேசினார். அவரது பேச்சு தொடர்பாக, பீளமேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரித்த போலீசார் அவர் மீது, தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்
பா.ஜ., பிரமுகர் விடுதலை: தொண்டர்கள் வரவேற்பு

கோவை : கோவை மாநகர் மாவட்ட பா.ஜ., தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி நேற்று ஜாமினில் வௌியே வந்தார்.

தி.மு.க., துணை பொதுச்செயலர் ராஜாவின் பேச்சை கண்டித்து, ஹிந்து முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாலாஜி உத்தம ராமசாமி பேசினார். அவரது பேச்சு தொடர்பாக, பீளமேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரித்த போலீசார் அவர் மீது, தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்தனர்.



அவரை செப்., 21ல் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி, கோவை மாவட்ட கோர்ட்டில் நேற்று முன்தினம் உத்தரவிடப்பட்டது. அதன்படி, நேற்று மாலை அவர் சிறையில் இருந்து வௌியே வந்தார். அங்கு திரண்டிருந்த ஏராளமான பா.ஜ., தொண்டர்கள், அவருக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
06-அக்-202220:24:52 IST Report Abuse
sankar இதுக்கே கைது என்றால் - நித்தம் நித்தம் பிரதமர் & உள்துறை அமைச்சர் மற்றும் இந்திய நாடு என்று சொல்ல கூச்சப்படும் இவர்களை என்ன செய்யலாம்
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
01-அக்-202206:07:43 IST Report Abuse
NicoleThomson அவர் என்ன பேசினார் என்று நீங்களாவது இங்கே பிரசுரிக்கலாமா ?
Rate this:
duruvasar - indraprastham,இந்தியா
01-அக்-202211:19:48 IST Report Abuse
duruvasarஅவர் ஸ்டாலின் நலமுடன் இருக்கவேண்டும் என பேசி இருந்தாலும் சரி .எது சொல்ல்வாதாக இருந்தாலும் ஸ்டேஷனில் வந்து சொல்லுங்க என்பார்கள் போலீஸ்காரங்க என்பதுபோல் திரை படங்களில் காட்டுவார்கள் . அதே போல் கைதுக்கு பிறகு நீ சொல்லவேண்டியதை எல்லாம் கோர்ட்டில் சொல்லி முடிஞ்சா வெளிய வந்துகோ என சொல்லி இருப்பார்கள் என தோன்றுகிறது ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X