கடலுார் மத்திய சிறையில் 'சவுக்கு' சங்கர் உண்ணாவிரதம்

Added : அக் 01, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
கடலுார்: கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 'யு டியூபர்' சவுக்கு சங்கர், திடீரென நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.நீதித்துறை குறித்து அவதுாறாக பேசியதாக, சங்கர் மீது தொடரப்பட்ட வழக்கில், மதுரை கோர்ட் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தது.அதையடுத்து, அவர் மதுரை சிறையில் இருந்து கடந்த 16ம் தேதி, கடலுார் சிறைக்கு மாற்றப்பட்டார். கடந்த 14 ஆண்டுகளாக தற்காலிக
Savkku Shankar, Fasting, Cuddalore Jail,  சவுக்கு சங்கர், உண்ணாவிரதம், Cuddalore Central Jail, You Tuber, கடலுார் மத்திய சிறை, யு டியூபர்,

கடலுார்: கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 'யு டியூபர்' சவுக்கு சங்கர், திடீரென நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

நீதித்துறை குறித்து அவதுாறாக பேசியதாக, சங்கர் மீது தொடரப்பட்ட வழக்கில், மதுரை கோர்ட் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தது.அதையடுத்து, அவர் மதுரை சிறையில் இருந்து கடந்த 16ம் தேதி, கடலுார் சிறைக்கு மாற்றப்பட்டார். கடந்த 14 ஆண்டுகளாக தற்காலிக பணிநீக்கத்தில் இருந்த அவரை, பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கி, லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புத்துறை, கடந்த 24ல் உத்தரவிட்டது.



அதுகுறித்த நோட்டீசை அவர் வாங்க மறுத்ததால், சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ள அறை வாசலில் ஒட்டப்பட்டது. இந்நிலையில், அவரை பார்க்க பார்வையாளர்கள் அதிகம் வருவதால், ஒரு மாதத்துக்கு பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டதாக தெரிகிறது.அதை கண்டித்தும், தடையை நீக்க கோரியும் நேற்று உண்ணாவிரதத்தில் அவர் ஈடுபட்டார்.உண்ணாவிரதம் குறித்து சிறை அதிகாரிகளுக்கு அவர் அளித்த கடிதத்தை அவர்கள் வாங்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இலங்கை
01-அக்-202217:12:50 IST Report Abuse
jagan இந்த ஆறுமாசம் முடியும் முன் இன்னொரு கேஸ் போட்டு இன்னமும் ஆறு மாசம் வரும். GRS பற்றி தனிப்பட்ட முறையில் பேசியதற்கான கேஸ் வரும். இன்னும் ஒரு வருஷம் இவருக்கு களி தான்.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
01-அக்-202212:43:24 IST Report Abuse
jayvee விடுங்க.. இந்த சோத்தை யாராவது அனாதைக்கு போடுங்க.. வேலையே செய்யாமல் அரை சம்பளம்.. அதுவும் பதினைந்து வருடங்கள்.. இவர் மீது இருக்கும் பாலியல் சீண்டல் குற்றத்தை எந்த கழக அரசும் தொடாததன் காரணம் ? இவருக்கு அணைத்து அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஊழல் .. அதுதான் காரணம்
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
01-அக்-202208:09:10 IST Report Abuse
Girija ஆஸ்திரேலியா, ஒரு மார்க்கமா அவதூறு பேசுவது சரியா? வெறும் ஆயிரம் ருபாய் முதியோர் உதவித்தொகைக்கு அல்லாடும் முதியவர்கள் இருக்கையில், வேலையே செய்யாமல் மாதந்தோறும் 45000 ருபாய் பதின்நான்கு வருடமாக பெற்று பிழைப்பூதியம் பெற்று வயிறு வளர்த்தது சரியா?மோட்டார் பைக்குகள் மற்றும் கார்களில் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டி விட்டால் நோ பார்க்கிங்கில் அபராதம் கிடையாது , அதே போல் போலீஸ் வாகன சோதனையின் போது இந்த ஸ்டிக்கர் மேலோட்டமாக பார்த்து அனுப்பிவிடுவர்,
Rate this:
Girija - Chennai,இந்தியா
01-அக்-202208:16:29 IST Report Abuse
Girijaஅது போல, இவர் பாதிக்கப்பட்ட முன்னாள் போலீஸ் என்று மக்களை நம்பவைத்துள்ளார்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X