ஆன்-லைனில் வலை விரிக்கும் கடன் செயலிகள்...உஷார்

Updated : அக் 01, 2022 | Added : அக் 01, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுச்சேரி : கடன் செயலிகள் விஷயத்தில் பொதுமக்கள் உஷராக இருக்க வேண்டும் என பிளே ஸ்டோரில் இருந்து 55 கடன் செயலிகளை நீக்கியுள்ள புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.நமது அவசரத்திற்கு கடன் வாங்க வங்கி, நிதி நிறுவனங்களை அணுகினால் அவ்வளவு சிக்கிரத்தில் கிடைக்காது. அதற்கான நடைமுறைகள் அதிகம். ஆனால், ஆன்-லைனில் உள்ள கடன் செயலிகளை அணுகினால் எளிதில் கிடைத்து
Online, Loan Apps,Cyber crime, ஆன்லைன், கடன் செயலிகள், புதுச்சேரி, சைபர் கிரைம்,  Puducherry,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


புதுச்சேரி : கடன் செயலிகள் விஷயத்தில் பொதுமக்கள் உஷராக இருக்க வேண்டும் என பிளே ஸ்டோரில் இருந்து 55 கடன் செயலிகளை நீக்கியுள்ள புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.நமது அவசரத்திற்கு கடன் வாங்க வங்கி, நிதி நிறுவனங்களை அணுகினால் அவ்வளவு சிக்கிரத்தில் கிடைக்காது. அதற்கான நடைமுறைகள் அதிகம். ஆனால், ஆன்-லைனில் உள்ள கடன் செயலிகளை அணுகினால் எளிதில் கிடைத்து விடுகிறது.அதற்கேற்ப பிளே ஸ்டோரில் ஆன்லைனில் கடன்கள் வழங்கும் செயலிகள் தற்பொழுது அதிகமாகியுள்ளன. இதில் ஒருமுறை உங்கள் மொபைல் எண், , ஆதார் எண் உள்ளிட்ட பிற விபரங்களை பதிவு செய்துவிட்டு உங்கள் அவசர தேவைக்கு ஏற்ப தொகையை வாங்கிக் கொள்ளலாம்.அப்படி வாங்கும் தொகையை குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் கூறும் வட்டியுடன் சேர்த்து செலுத்தி விட்டால் பிரச்னை இல்லை என்பது போன்ற அறிவிப்புகள், வாக்குறுதிகளை கடன் செயலிகள் அள்ளி விடுகின்றன.latest tamil news


அதனை நம்பி கடன் வாங்கினால் அவ்வளவு தான். அதிக வட்டி மற்றும் அறிவிக்கப்படாத கட்டணங்களை நிர்ணயித்து திரும்ப செலுத்த வேண்டிய தொகையை அதிகரித்து வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி விடும்.புதுச்சேரியில் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்த சூழ்நிலையில் பிளே ஸ்டோரில் உள்ள 55 கடன் செயலிகளை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் மத்திய அரசு உதவியுடன் நீக்கியுள்ளனர்.இதனை தொடர்ந்து புதுச்சேரி சைபர் கிரைம் எஸ்.பி.,நாரா சைதன்யா விடுத்துள்ள எச்சரிக்கை பதிவு:கடன் செயலிகள் குறைந்த வருமானம் கொண்டவர்களைத் தான் குறி வைக்கின்றன. கடன் செயலிகள் ரூ.2,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை அவசரத்திற்கு கடன் தருகின்றன. இந்த செயலிகள் மூலம் கடன் பெறுவது எளிதாக இருந்தாலும், அந்த பணத்தை திரும்ப வசூலிக்க கடன் வழங்கும் நிறுவனங்கள் கையாளும் முறைகள் மிகவும் மோசமானவையாக உள்ளன.ரூ.10 ஆயிரம் கடன் வாங்கினால், அதனை குறித்த காலத்திற்குள் பதிவு கட்டணம், நடைமுறை கட்டணம், வட்டி என ரூ. 8,000 சேர்த்து மொத்தம் 18,000 கட்ட வேண்டும். தவறினால், மொபைலில் மர்மநபர்களால் மிரட்டல் விடுகின்றனர்.அவர்கள் மொபைலில் வைத்திருக்கும் அவர்களின் உறவினர்கள், நண்பர்களின் மொபைல் எண்களுக்கு இவர்களைப் பற்றிய அவதுாறாக தகவல்களை அனுப்புகின்றனர். சில நேரங்களில் இவர்களின் படங்களை ஆபாசமாக சித்தரித்தும், நண்பர்கள் உறவினர்களுக்கு பரப்பும் அத்துமீறல்களும் நடைபெற்று வருகின்றன.பலர் இதை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.எனவே இதுபோன்ற மோசடியான 55 கடன் செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளோம்.ஆன்-லைன் கடன் செயலி விஷயத்தில் பொதுமக்கள் கவனமாக இருக்கவேண்டும். கடன் செயலிகள் ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டதா என்பதை உறுதி செய்த பின் கடன் வாங்க வேண்டும். இது போன்ற கடன் செயலி மோசடி இருந்தால் 1930 என்ற சைபர் கிரைம் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.


இவற்றையெல்லாம் தவிர்க்கவும்

● சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்வதையோ அல்லது வங்கி அல்லது நிதி நிறுவனத்திற்கு உங்கள் தகவலை வழங்குவதையோ தவிர்க்கவும்● லோன் செயலிகளை பதிவிறக்குவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை சரி பார்க்க வேண்டும்.● சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம்.● உங்கள் தனிநபர் தகவல்களை திருடக்கூடிய அங்கீகரிக்கப்படாத செயலிகளை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது.● உங்கள் தரவு திருடப்படாமல் பாதுகாக்க ஆப்ஸ் அனுமதி செட்டிங்ஸை சரிபார்க்கவும்.● சந்தேகத்திற்கிடமான கடன் வழங்கும் செயலிகள் குறித்து உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுக்குப் புகாரளிக்கவும்.● ஒருவேளை உங்களுக்கு பணம் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை நேரடியாக தொடர்பு கொள்வது முக்கியம்.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-அக்-202218:42:03 IST Report Abuse
அப்புசாமி கடன் குடுப்பவன் என்ன செவ்வா கிரக ஸ்டேட் பேங்கிலிருந்தா பணம் குடுக்கறான்? எந்த அக்கவுண்ட்டில் இருந்து பணம் வருதுன்னு கண்டுபிடிச்சு நோண்டி நொங்கெடுக்காம...
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
01-அக்-202214:11:26 IST Report Abuse
Mohan ஓ, இதுகூட புதுச்சேரி சைபர் கிரைம் போலீசாரின் முயற்சிதானா.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
01-அக்-202204:51:51 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வாங்குற சம்பளம் மாசாக்கடைசி வரைக்கும் வர்ற மாதிரியா விலைவாசி இருக்குது. அப்புறம் கடன் வாங்கி கடைசியிலே தூக்கிலே தான் தொங்கோணும்ன்னு தலையெழுத்து.
Rate this:
Fastrack - Redmond,இந்தியா
01-அக்-202207:34:05 IST Report Abuse
Fastrackஅளவோடு பெற்று வளமோடு வாழலாமே .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X