உக்ரைனின் 4 பிராந்தியங்கள் முறைப்படி ரஷ்யாவுடன் இணைப்பு

Updated : அக் 01, 2022 | Added : அக் 01, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
கீவ் : உக்ரைனில், பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த நான்கு பிராந்தியங்கள் நேற்று முறைப்படி ரஷ்யாவில் இணைக்கப்பட்டுள்ளதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிரகடனப்படுத்தினார்.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா பிப்ரவரி 25ல் போர் தொடுத்தது. ஏழு மாதங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே உள்ள நான்கு பிராந்தியங்களான
Ukraine War,Vladimir Putin,Russia, விளாடிமிர் புடின், உக்ரைன், பிராந்தியங்கள், ரஷ்யா, உக்ரைன் போர், Ukraine, Territories

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கீவ் : உக்ரைனில், பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த நான்கு பிராந்தியங்கள் நேற்று முறைப்படி ரஷ்யாவில் இணைக்கப்பட்டுள்ளதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிரகடனப்படுத்தினார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா பிப்ரவரி 25ல் போர் தொடுத்தது. ஏழு மாதங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே உள்ள நான்கு பிராந்தியங்களான டோனெட்ஸ்க், லுஹான்க்ஸ், கெர்சான் மற்றும் ஜபோரிஸ்சியாவை தன்னுடன் இணைக்க ரஷ்யா திட்டமிட்டது.



latest tamil news


இந்த பிராந்தியங்கள் உக்ரைன் அரசுக்கு எதிரான கொள்கையை பின்பற்றி வரும் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. இவர்களுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வந்தது. இந்நிலையில் இந்தப் பிராந்தியங்களில் மக்களின் கருத்துகளை கேட்கும் ஓட்டெடுப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் ரஷ்யாவுடன் இணைய இந்த பிராந்தியங்களைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் ஆதரவு அளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.




latest tamil news


இதைத் தொடர்ந்து மாஸ்கோவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இந்த நான்கு பிராந்தியங்களும் ரஷ்யாவுடன் முறைப்படி இணைக்கப்படுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று பிரகடனப்படுத்தினார். ரஷ்யாவின் இந்த தன்னிச்சையான முடிவுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
01-அக்-202212:57:01 IST Report Abuse
Anand அமெரிக்கா எந்த இடத்தில் கால் வைத்தாலும் அது யுத்தபூமியாக மாறிவிடும்.........
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
01-அக்-202212:47:54 IST Report Abuse
jayvee கச்சா தீவு திமுக மற்றும் காங்கிரெஸ்ஸால் தாரைவார்க்கப்பட்ட ஒன்று.. அதாவது தானமாக கொடுக்கப்பட்ட ஒன்று.. ரஷ்யா உடைந்தது மிகைல் கோர்பச்சேவ் அமெரிக்காவுடன் கைகோர்த்து செய்த துரோகம்.. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு..
Rate this:
Cancel
Asagh busagh - Munich,ஜெர்மனி
01-அக்-202212:01:03 IST Report Abuse
Asagh busagh தோல்வி மேல் தோல்வி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X