மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் மின்தடை; ரூ.4 கோடி உற்பத்தி பாதிப்பு

Added : அக் 01, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுச்சேரி ; மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் தொடரும் மின் தடையால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி மின் துறை ஊழியர்கள் தனியார் மயமாக்கலை கண்டித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியுள்ளது. இதனைக் கண்டித்து பொதுமக்களும்
மேட்டுப்பாளையம், தொழிற்பேட்டை, மின்தடை, Mettupalayam, Industrial Estate, Power cut,புதுச்சேரி ; மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் தொடரும் மின் தடையால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி மின் துறை ஊழியர்கள் தனியார் மயமாக்கலை கண்டித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியுள்ளது.இதனைக் கண்டித்து பொதுமக்களும் தினமும் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.மின் தடையால் பொதுமக்கள் மட்டுமின்றி, தொழிற்சாலைகளும் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றன.மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் 250 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் அப்பகுதியில் நேற்று முன்தினம் (29ம் தேதி) மாலை 3 மணிக்கு ஏற்பட்ட மின் தடை நேற்று வரை சரி செய்யப்படவில்லை. இதனால், ஜெனரேட்டர் வசதி இல்லாத சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் கடும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளன. குறிப்பாக பிளாஸ்டிக், பேக்கிங், லாண்டரி, கெமிக்கல் தொழிற்சாலைகள் அனைத்தும் உற்பத்தி இல்லாமல் முடங்கி உள்ளன.தண்ணீர் பிரச்னை


மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் தொழிற்சாலைகளின் தேவைக்காக மூன்று இடங்களில் குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இருப்பினும், மின்தடை காரணமாக நேற்றுமுன்தினம் முதல் சொட்டு தண்ணீர் கூட தொழிற்சாலைகளுக்கு கிடைக்கவில்லை. இதனால், தொழிற்சாலைகளின் நிர்வாகிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர்.பணிக்கு வந்த தொழிலாளர்கள் கழிவறைக்கு கூட செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர்.


உற்பத்தி 'அவுட்'


இங்குள்ள சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் தினசரி ரூ.2கோடி அளவிற்கு பொருட்கள் உற்பத்தியாகி, பிற ஊர்கள் மற்றும் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். மின் தடையால் உற்பத்தி முடங்கியுள்ளது. பெரிய தொழிற்சாலைகள் ஜெனரேட்டரை வைத்து சமாளித்து வருகிறது. மின்சாரம் இல்லாமல் எவ்வளவு நாட்கள் தாக்கு பிடிக்க முடியும் என்று தெரியவில்லை.


15 நிமிட பிரச்னை


புதுச்சேரி சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் தலைவர் வேலாயுதம் கூறியதாவது:மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட மின்தடை குறித்து நேற்றுமுன்தினம் மின் துறை கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், ஒப்பந்த ஊழியர்கள் வந்து பார்த்தனர். ஆனால் அவர்களால் எங்கு மின் தடை ஏற்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திரும்பினர்.வழக்கமாக 15 நிமிடத்தில் மின் தடை கண்டறிந்து சரி செய்யப்பட்டு விடும். ஆனால் இரண்டு நாட்களாகியும் மின்தடை சரி செய்யப்படவில்லை.இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களில் மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் மட்டும் ரூ.4 கோடி அளவிற்கு உற்பத்தி பாதித்துள்ளது. மின் தடை தொடர்ந்தால் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் நிலைமை இன்னும் மோசமாகும். தொழிற்சாலைகளுக்கு விடுமுறை விடக்கூடிய சூழல் கூட ஏற்படும். இதனால், தொழிலாளர்களுக்கு வேலை இல்லாத சூழல் ஏற்படும்.எனவே, இவ்விஷயத்தில் அலட்சியமாக இல்லாமல் அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தொழிற்பேட்டைக்கு தடையில்லா மின்சாரம் வழங்கிட வேண்டும் என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
01-அக்-202204:39:07 IST Report Abuse
Mani . V யார் வீட்டில் எழவு விழுந்தாலும் கவலையில்லை. எங்கள் குடும்பம், கட்சிக்கு ஜால்ரா அடிப்பவர்கள் நன்றாக இருந்தால் போதும் என்று நினைக்கும் ஆட்சியாளர்கள் இருக்கும் வரையில் தமிழகத்து விடிவே இல்லை. ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. அதுபோல் விலையே மதிக்க முடியாத வாக்கை சில ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததின் பலனை மக்கள் இப்பொழுது அனுபவிக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X