சீன நிறுவனமான ஜியோமியின் ரூ.5551 கோடி 'டிபாசிட்' முடக்கம்

Added : அக் 01, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி: சீனாவை தலைமை இடமாகக் கொண்டு இந்தியாவில் செயல்படும் ஜியோமி 'ஸ்மார்ட் போன்' நிறுவனத்தின் 5551 கோடி ரூபாய் 'டிபாசிட்'கள் முடக்கப்பட்டுள்ளன.'சீனாவை சேர்ந்த இந்த நிறுவனம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதற்காக அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. அமலாக்கத் துறை
China, FEMA, Xiaomi, ED

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: சீனாவை தலைமை இடமாகக் கொண்டு இந்தியாவில் செயல்படும் ஜியோமி 'ஸ்மார்ட் போன்' நிறுவனத்தின் 5551 கோடி ரூபாய் 'டிபாசிட்'கள் முடக்கப்பட்டுள்ளன.

'சீனாவை சேர்ந்த இந்த நிறுவனம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதற்காக அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் 2014ல் இந்நிறுவனம் துவங்கப்பட்டது. இந்நிறுவனம் இங்குள்ள உற்பத்தியாளர்களிடம் ஸ்மார்ட் போன்களை வாங்கி உலகம் முழுவதும் விற்பனை செய்து வந்தது.latest tamil news


இந்நிறுவனத்தின் சீன தலைமையகம் அளிக்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றியே ஸ்மார்ட் போன்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆண்டுக்கு 34 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வரும் ஜியோமி நிறுவனம் அதன் பெரும் பகுதியை சீனாவில் உள்ள தனது குழும நிறுவனங்களுக்கே அனுப்பி வருவது கண்டறியப்பட்டது. மீதமுள்ள தொகைகள் சிட்டி பாங்க் ஐ.டி.பி.ஐ. மற்றும் ஹெச்.எஸ்.பி.சி. உள்ளிட்ட வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளன.மேலும் இதில் சம்பந்தமே இல்லாத இரண்டு அமெரிக்க வங்கிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை அனுப்பப்பட்டுள்ளது. அதேநேரம் இந்திய ஒப்பந்த உற்பத்தியாளர்களுக்கு மென்பொருள் தொடர்பாக எந்தவித தொழில்நுட்பமும் வழங்கவில்லை. வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் போது வங்கிகளுக்கு தவறான தகவலை அளித்துள்ளது. இது குறித்து நீண்ட நாள்களாக கண்காணித்து வந்த அமலாக்கத் துறை உரிய விசாரணைக்குப் பிறகே ஜியோமி நிறுவன டிபாசிட்களை முடக்கியுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
01-அக்-202218:24:28 IST Report Abuse
MARUTHU PANDIAR சீன தயாரிப்பின் மற்றொரு பெயர் தான் யூஸ் அண்டு த்ரோ ++++இந்த சொல்லே சீன பொருட்கள் வந்த பிறகு தான் வழக்கத்துக்கே வந்தது++++நம்ப ஆளுங்க தான் சீப் அக எத குடுத்தாலும் ஆலாய்ப் பறக்கறாங்களே ? என்ன செய்வது? மாறவே மாட்டாங்க போல.
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
01-அக்-202213:06:46 IST Report Abuse
Sivagiri அமெரிக்கமாவில் வேற யாரு ? நம்ம காங்கிரஸ் கம்பெனி மேனேஜர்கள்தான் - இருக்குமோ ? . .
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
01-அக்-202212:55:17 IST Report Abuse
Anand பூமிக்கு பாரமான திராவிட கூட்டம் ஒரு சேர மத்திய அரசுக்கு எதிரா கூவும்....
Rate this:
Viswanathan - Thanjavur,இந்தியா
01-அக்-202217:11:52 IST Report Abuse
Viswanathanகூப்பிட்டு விருந்து கொடுத்தானுங்க...அவன் எல்லாத்துக்கும் பெப்பேன்னு சொல்லி மூஞ்சியில் பூசிட்டு போய்ட்டான்..,...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X