ஜி.பி.எஸ்., முறையில் சுங்க வசூல்: ஜனவரியில் அமல்படுத்த திட்டம்

Added : அக் 01, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை : ஜி.பி.எஸ்., முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை ஜனவரியில் அமல்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது.தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க தமிழகத்தில் 54 இடங்கள் உட்பட நாடு முழுதும் 805 இடங்களில் சுங்கச்சாவடிகளில் அமைக்கப்பட்டு உள்ளன. பணமில்லாத பரிவர்த்தனை அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிக்க 'பாஸ்டேக்'
GPS, toll plaza, toll gate

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : ஜி.பி.எஸ்., முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை ஜனவரியில் அமல்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க தமிழகத்தில் 54 இடங்கள் உட்பட நாடு முழுதும் 805 இடங்களில் சுங்கச்சாவடிகளில் அமைக்கப்பட்டு உள்ளன. பணமில்லாத பரிவர்த்தனை அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிக்க 'பாஸ்டேக்' திட்டம் நடைமுறையில் உள்ளது. இதற்காக, தேசிய மற்றும் தனியார் வங்கிகள் பணப் பரிமாற்ற வங்கிகள் வாயிலாக, 'பாஸ்டேக்' ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டு உள்ளன.



வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது.வாகனங்கள் செல்லும்போது சுங்கச்சாவடிகளில் உள்ள மின்னணு கருவி வாயிலாக, வங்கி கணக்கில் இருந்து கட்டணம் கழித்து கொள்ளப்படுகிறது. இதன் வாயிலாக வாகனங்கள் காத்திருப்பு குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாகனங்களின் காத்திருப்பு தொடர்கிறது.



பாஸ்டேக் நடைமுறை தோல்வி அடைந்துள்ளதால், வெளிநாடுகளில் உள்ளது போல, ஜி.பி.எஸ்., முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இதற்காக சுங்கச்சாவடிகளின் அருகில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்தப்பட உள்ளன.



latest tamil news


வாகனங்கள், சுங்கச்சாவடிகளை கடக்கும்போது ஜி.பி.எஸ்., கருவி வாயிலாக அடையாளம் காணப்பட்டு சுங்கக் கட்டணம் வங்கிக் கணக்குகளில் இருந்து கழித்து கொள்ளப்பட உள்ளது.இதில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. சுங்க கட்டணம் செலுத்தாமல் வாகனங்கள் செல்லவும் அதிக வாய்ப்புள்ளது.



இருப்பினும், சோதனை முறையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்த திட்டத்தை பல்வேறு சுங்கச்சாவடிகளில் செயல்படுத்த, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்துள்ளது. இதற்காக, தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, சேலம் மாவட்டங்களில் உள்ள 10 சுங்கச்சாவடிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-அக்-202218:40:08 IST Report Abuse
அப்புசாமி /////
Rate this:
Cancel
arjerlin - chennai,இந்தியா
01-அக்-202215:48:46 IST Report Abuse
arjerlin ஹிட்ச்
Rate this:
Cancel
01-அக்-202209:37:30 IST Report Abuse
அப்புசாமி இன்னிக்கிதான் ஒரே நாளில் 24 டோல்கேட் பணியாளர்களை பணிநீக்கம் செஞ்சதா நியூஸ் வந்துச்சு. கொஞ்சநாளில் டோல்கேட் பக்கம் நடந்து போனாலே புடிச்சு டோல் வசூலிச்சுருவாங்க. அதுக்கு உங்க தலையில் ஒரு சிப் வெப்பாங்க. 2030 லிருந்து அது கட்டாயமாக்கப்படும். குடியரசு தலவர், பிரதமர், மந்திரிகள் , எம்.பி க்கள், எம்.எல்.ஏக்கள், ஜட்ஜ்மாருங்க, மத்திய அரசு ஊழியர்களுக்கு விலக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X