தி.மு.க., - ஈ.வெ.ரா., ஏட்டிக்கு போட்டி: மறக்க முடியுமா?

Updated : அக் 02, 2022 | Added : அக் 01, 2022 | கருத்துகள் (206) | |
Advertisement
சென்னை: தங்களுக்கு ஈ.வெ.ரா., தான் பெரிய தலைவர் என்றும், ஈ.வெ.ரா., கண்டுபிடித்த திராவிட கொள்கையை தூக்கி பிடிப்பது தாங்கள் தான் என்றும், ஈ.வெ.ரா.,வை பின்பற்றுவதால் ஹிந்து மத எதிர்ப்பு அரசியல் செய்வதாகவும், ஈ.வெ.ரா., பாணியில் தமிழர்களை காப்பாற்ற வந்த ஒரே கட்சி தாங்கள் தான் என்றும் மார்தட்டி கொண்டிருக்கிறது தி.மு.க.,. அதே தி.மு.க.,வுக்கும் ஈ.வெ.ரா.,வுக்கும் 1950, 60 களில் எப்படியெல்லாம்
EV Ramasamy, DMK, Karunanidhi, M Karunanidhi, Annadurai, CN Annadurai, திமுக, ஈவெரா, ஏட்டிக்கு போட்டி

சென்னை: தங்களுக்கு ஈ.வெ.ரா., தான் பெரிய தலைவர் என்றும், ஈ.வெ.ரா., கண்டுபிடித்த திராவிட கொள்கையை தூக்கி பிடிப்பது தாங்கள் தான் என்றும், ஈ.வெ.ரா.,வை பின்பற்றுவதால் ஹிந்து மத எதிர்ப்பு அரசியல் செய்வதாகவும், ஈ.வெ.ரா., பாணியில் தமிழர்களை காப்பாற்ற வந்த ஒரே கட்சி தாங்கள் தான் என்றும் மார்தட்டி கொண்டிருக்கிறது தி.மு.க.,.

அதே தி.மு.க.,வுக்கும் ஈ.வெ.ரா.,வுக்கும் 1950, 60 களில் எப்படியெல்லாம் மோதல் நடந்தது கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்று தெரிந்தால், இந்த கால இளைஞர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். இப்போதுள்ள மூத்த தி.மு.க., தலைவர்கள் இந்த விஷயம் நன்கு தெரிந்தே, எல்லாவற்றையும் மறைத்து கொண்டிருக்கிறார்கள்.1949ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ம் தேதி ஈ.வெ.ரா., - மணியம்மை திருமணம் நடந்தது. அப்போது ஈ.வெ.ரா.,வுக்கு வயது 72. மணியம்மைக்கு வயது 27. அதுவரை, ஈ.வெ.ரா.,வின் பத்திரிகையில் பணியாற்றி கொண்டிருந்த அண்ணாதுரை, மகள் வயதை ஒட்டிய மணியம்மையை ஈ.வெ.ரா., திருமணம் செய்ததால் அதிருப்தியடைந்து, தனியாக சென்று 1949 செப்., 17ல் தி.மு.க.,வை ஆரம்பித்தார்.latest tamil news


தனிக்கட்சியை அண்ணாதுரை ஆரம்பித்ததால் பிடிக்காத ஈ.வெ.ரா., ராஜாஜியை ஆதரித்தார். இது தி.மு.க.,விற்கு பிடிக்கவில்லை. எனவே, ஈ.வெ.ரா.,வை விமர்சித்ததுடன், பிராமணர்களை மற்றவர்களுக்கு எதிராக திருப்பிவிட்டு, இவர் மட்டும் பிராமணர்களுடன் உறவாடுவதாக கார்ட்டூன் வெளியிட்டது. மறுநாள், திமுக.,விற்கு எதிராக தனது விடுதலை இதழில் ஈ.வெ.ரா., தாக்கி எழுதினார். இப்படி இரு தரப்பினரும் மாறி மாறி மோதிக்கொண்டனர்.சில நாட்கள் இது தொடர்ந்தது. ஆனால், இவ்வளவையும் மறந்துவிட்டு, தாங்கள் தான் ஈ.வெ.ரா.,வை காப்பாற்ற வந்தவர்கள் என்பது போல், அவரை தி.மு.க., தலையில் வைத்து கொண்டாடுகிறது. ஒரு காலத்தில் தி.மு.க.,வும் ஈ.வெ.ரா.,வும் எதிரும் புதிருமாக இருந்ததை இப்போது உள்ள தி.மு.க.,வினர் பலரும் மறந்துவிட்டனர் அல்லது வரலாறு தெரியாமல் இருக்கின்றனர்.இப்படி எல்லாம் ஈ.வெ.ரா., பற்றியும் தி.மு.க., பற்றியும், சமூக வலைதளங்களில் பலர் பகிர்ந்து வருகின்றனர். ஈ.வெ.ரா., பற்றி, முரசொலியில் இடம் பெற்ற கார்ட்டூன் வைரலாகி பரவி வருகிறது

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (206)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
02-அக்-202206:03:35 IST Report Abuse
D.Ambujavalli அப்படியே படித்து, அறிவார்ந்த, விவரமானவர்கள் ஓட்டுப்போட விடாமல் பட்டியலில் தில்லுமுல்லு, கள்ள வோட்டு, என்று அவர்களுக்கு வாய்ப்பு வந்துவிடாமல் குவார்ட்டர், பிரியாணி க்ரூப்பின் வோட்டுகளால் வந்து அமர்ந்துகொண்டு, நம் வரிப்பணத்தில் நலத்திட்டம் கொண்டுவந்து அதை அவர்கள் கைக்காசுபோல நம்மை ஓசி, பிச்சைக்காரர்கள் - இன்னும் அது சொல்லவில்லை விரைவில் அடுத்த அமைச்சர் சொல்லிவிடுவார் -என்று கேவலப்படுத்துவார்கள் 'இதுவும் ஒரு பெருமை என்று நம்பி வாழ்வார்கள்'
Rate this:
Cancel
அஜய்,தேசியமும் தெய்வீகமும் என்று வழுபவன் பார்ப்போம் இன்னும் எத்தனை வருடம் ...இந்த திராவிட கட்சிகள் நம்மை ஏமாற்றி பிலைகிரார்கள்....என்று. ஆனால் தமிழ் மக்கள் அவ்வளவு எழுத்தில் திராவிட மாயையை புரிந்து கொள்ள மாட்டார்கள். நாம் இந்த திராவிட கட்ச்சிகளுக்கே அடிமையாக இருக்க வேண்டியது தான... ஏன் கொடுமை சரவண இது...!! உண்மையில்...அவமானமாக இருக்கிறது. இந்த advance developed system உள்ள காலத்திலும் ...இந்த திராவிட கட்சிகள் நம்ம ஏமாற்றி அவர்கள் கோடி கோடி யான பணம் களை மக்களை ஏமாற்றி அவர்கள் குடும்பத்தை அடுத்த 5 or 6 தலை முறைக்கு மேல் சொத்து சேர்த்து விடுகிறார்கள். மிகவும் கேவலம் .... நன்றாக தெரிந்து இவர்களை கண்டும் கானது போல் வாழ்கிறோம். ..மீண்டும் மீண்டும் இவர்களை ஆட்சி கட்டிலில் வைத்து அழகு பார்க்கிறோம். இதை ...வேறு நாட்டு மக்களிடம் சொன்னால் நம்மை முட்டாள்கள் என்றுதான் சொல்லு வார்கள்.
Rate this:
Raja - Coimbatore,இந்தியா
04-அக்-202209:57:17 IST Report Abuse
Rajaதமிழ் தாண்டவம் ஆடுது. தமிழ் மெல்ல சாகும் என்று பாரதி சொன்னார். ஆனால் உங்கள் கருத்தை படித்தபிறகு மிக விரைவில் செத்துவிடுமோ என்ற அச்சம் வந்துவிட்டது. முதலில் பெயரை சரி செய்யுங்கள். பின்னர் சமுதாயத்தை சரி செய்யலாம்....
Rate this:
Cancel
அஜய்,தேசியமும் தெய்வீகமும் என்று வழுபவன் தமிழ் மக்களின் மிக பெரிய weakness points இந்த திராவிட கட்சிகளுக்கு நன்றாக தெரியும். ஆகையால் தான் இத்தனை வருடமும் ...இனிமேலும் நம்மை முட்டாளாக்கி இந்த திராவிட கட்சிகளும் அடிமையாக இருக்க வேண்டியது தான். நம் தமிழர்களின் weakness points 1.முதலில் ஒற்றுமை இருக்காது, 2.அவ்வளவு எளிதில் அடுத்தவர்களுக்கு உதவிட மாட்டான். 3.அடிமையாக இருந்து பழகி விட்டது. 4.பணம் கொடுத்து எழுத்தில் விலைக்கு வாங்கி முடியும். 5.பொய் வாக்குறுதிகளை எழுத்தில் நம்பிடுவான் 6. இவர்கள் தீரா மொழி பற்றை...திராவிட கட்சிகள் அவர்களுக்கு சரியான ஆயுதமாக பயன் படுத்துகிறார்கள். இவர்களை மற்ற மாநிலத்திற்கு செல்ல விடாமலும், மற்ற மொழிகளை கற்று கொள்ளாமலும் பார்த்து கொள்கிறார்கள். இதனால் இவர்களை முளை சலவை செய்து எழுத்தில் இவர்கள் வாக்குகளை பெற்று எழுத்தில் இவர்கள் ஆட்சியை நிலை நிறுத்தி கொள்கிறார்கள். 7. ஆங்கிலேயர்கள் காலத்தில் உள்ள பிரித்து ஆளும் கொள்கையை ..இவர்களும் சரியாக பயன் படுத்துறார்கள். இவர்களின் மதம் மாற்று ஜாதி பிரச்சனை இன்னும் கடை பிடிக்க வைத்து, இதன் மூலமும் இவர்கள் அரசியல் ஆட்சியை நிலை நிறுத்தி கொள்கிறார்கள். 8.தமிழர்களை ஒவ்வொரு 5வருடமும் முன் இருந்த கட்சியின் எல்லா வித தவறுகளை மன்னித்து, தற்போதை கட்சியை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என்று அறிந்து வைத்து இருக்கிறார்கள். 9.தமிழர்கள் எப்போதும் தான் மிகவும் உலகத்துலேயே தான் தான் புத்தி என்ற நினைப்பு இருப்பதை இந்த திராவிட கட்சிகள் ஆயுதமான பயன் படுத்துகிறார்கள். காரணம் எழுத்தில் உலக்கிலே நீங்கள் தான் மூத்த குடி, தமிழ் குரங்கு, தமிழ் தான் மூத்த மொழி, நீங்கள் தான் எல்லாமே..ஆகையால் நீங்கள் உங்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றி மாற்றி வாக்கு அளியுங்கள். நாங்கள் மாற்றி மாற்றி உங்களை ஏமாற்றி ஆழ்கிற்றோம்...ஏன் என்றால் நீங்கள் வடி கட்டிய மொழி, இன,மத,ஜாதி பற்று கொண்ட முட்டல்கள் என்று நன்கு அறிந்து வைத்து இருக்கிறார்கள். இன்னும் நமது weakness point சொல்லி நம்மையே அசிங்க படுத்தி கொள்ள விருப்பம் இல்லை. ஆனால் இல்லை என்று யாரும் இங்கு சொல்ல முடியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X