நாமக்கல் : நகர மளிகை வர்த்தகர் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. சங்கத் தலைவர் பத்ரிநாராயணன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜெகதீசன், மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பின் பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் பங்கேற்று பேசினார். கூட்டத்தில், அரசின் புதிய சட்டங்களால் மளிகை வியாபாரிகளுக்கு ஏற்படும் இன்னல்கள், 'மாதிரி கொள்முதல்' என்ற பெயரில் அதிகாரிகளின் திடீர் சோதனை குறித்து விவாதிக்கப்பட்டது.