மதுரை -மதுரை பிள்ளைமார் சங்கம் மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நிர்வாக குழு துணைத் தலைவர் பழனி தலைமையில் நடந்தது. மேயர் இந்திராணி வழங்கினார். செயலாளர் முருகன், பொருளாளர் கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை சாந்தி வரவேற்றார். துணை செயலாளர் பொன்னுதுரை உள்ளிட்டோர் பேசினர். நிர்வாக குழு உறுப்பினர்கள் வீரபாண்டி, கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆசிரியை புனிதவள்ளி நன்றி கூறினார்.