தமிழகத்திற்கு ஆர்.எஸ்.எஸ்., புதிய அமைப்பா? அணிவகுப்பு அனுமதி மறுப்பதன் பின்னணி

Updated : அக் 01, 2022 | Added : அக் 01, 2022 | கருத்துகள் (79) | |
Advertisement
சென்னை : உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், கூட்டணி கட்சிகளையும், சிறுபான்மையினரையும் திருப்திபடுத்துவதற்காக, ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு, தி.மு.க., அரசு அனுமதி அளிக்க மறுத்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கடந்த 1925-ம் ஆண்டு விஜயதசமி நாளில், ஆர்.எஸ்.எஸ்., துவங்கப்பட்டது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியை ஒட்டி, நாடு முழுதும் சீருடையுடன் கூடிய அணிவகுப்பை, அந்த அமைப்பு
Tamil Nadu, RSS, DMK, ஆர்எஸ்எஸ், திமுக, Rashtriya Swayamsevak Sangh,  தமிழகம், தமிழ்நாடு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், கூட்டணி கட்சிகளையும், சிறுபான்மையினரையும் திருப்திபடுத்துவதற்காக, ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு, தி.மு.க., அரசு அனுமதி அளிக்க மறுத்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கடந்த 1925-ம் ஆண்டு விஜயதசமி நாளில், ஆர்.எஸ்.எஸ்., துவங்கப்பட்டது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியை ஒட்டி, நாடு முழுதும் சீருடையுடன் கூடிய அணிவகுப்பை, அந்த அமைப்பு நடத்தி வருகிறது.இந்த ஆண்டு காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி, தமிழகத்தில் 50-க்கும் அதிகமான இடங்களில் அணிவகுப்பு நடத்த, ஆர்.எஸ்.எஸ்., திட்டமிட்டிருந்தது.இதற்கு காவல் துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தை ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு நாடியது. அக்., 2-க்கு பதிலாக, நவம்பர் 6-ம் தேதி அணிவகுப்பு நடத்த அனுமதிக்குமாறு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல் துறை அனுமதி மறுத்ததால், ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு, இந்த ஆண்டு தமிழகம் முழுதும் பேசுபொருளாக மாறியுள்ளது.latest tamil news


தி.மு.க., கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர், 'ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி வழிவந்த தி.மு.க., அரசு, ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு அனுமதி அளிப்பதா?' என, போர்க்கொடி உயர்த்தினர்.கூட்டணி கட்சிகளையும், தன் ஓட்டு வங்கியான சிறுபான்மையினரையும் திருப்திபடுத்துவதற்காகவே, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், சட்டம் -ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு, தி.மு.க., அரசு தடை விதித்துள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தி.மு.க., கூட்டணி கட்சிகள் கூறுவதுபோல, தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு நடப்பது, இது முதன்முறையா, தமிழகத்திற்கு ஆர்.எஸ்.எஸ்., புதிய அமைப்பா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஆர்.எஸ்.எஸ்., துவங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே, தமிழகத்திலும் அறிமுகமாகி விட்டது. அதன் நிறுவனர் டாக்டர் ஹெட்கேவரால், சென்னைக்கு அனுப்பப்பட்ட மராட்டியரான தாதாராவ் பரமார்த், சென்னை, கோபாலபுரத்தில் முதல் கூட்டத்தைத் துவங்கினார்.அவரைத் தொடர்ந்து, சென்னை வந்த சிவராம் ஜோக்லேக்கர் என்ற மராட்டியர், பெரம்பூரில் இருந்த பின்னி மில் தொழிலாளர்கள் பலரை, ஆர்.எஸ்.எஸ்., பக்கம் ஈர்த்தார். அவர்களில் பெரும்பாலானவர்கள், ஆதிதிராவிடர்கள் மற்றும் வன்னியர்கள் என்பதும், அவர்களில் சிலர், முழுநேர ஊழியர்களாக உருவாகினர் என்பதும் ஆச்சரியமான விஷயம்.சுவாமி சித்பவானந்தர் ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு பெரும் ஆதரவளித்தார். இதனால், கொங்கு பகுதியில் உள்ள அவரது பக்தர்கள் பெருமளவில், அந்த அமைப்பில் இணைந்தனர். காந்தி படுகொலையை தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ்., தடை செய்யப்பட்டது.அதை எதிர்த்து, தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்படி நடந்த போராட்டத்தில் பங்கேற்று, மதுரை சிறையில் இருந்தவர்களில் முக்கியமானவர், தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன். ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியராக இருந்த அவர், பின் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகவும் பணியாற்றினார். கடந்த 1940-ல் நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி முகாமில், தமிழகத்தில் இருந்து இரண்டு பேர் பங்கேற்றனர். 70 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., சீருடை அணிவகுப்பு நடந்து வருகிறது.ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: இப்போது சில அரசியல் கட்சிகள், தமிழகத்தில் ஒரே நாளில், 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு நடத்தலாமா என்று கேட்கின்றனர். நாங்கள் தமிழகத்தில் ஒரே நேரத்தில், 25 இடங்களில், ஒரு வார பயிற்சி முகாம்களை பல்லாண்டுகளாக நடத்தி வருகிறோம். ஆண்டுதோறும் ஏழு நாள் பயிற்சி முகாமில், 4,000 பேரும், தலா 20 நாட்கள் நடக்கும் முதலாம், இரண்டாம் ஆண்டு பயிற்சி முகாம்களில் 1,000 பேரும் பங்கேற்கின்றனர்.ஆர்.எஸ்.எஸ்., தமிழகத்திற்கு புதிய அமைப்பு அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kijan - Chennai,இந்தியா
01-அக்-202222:33:31 IST Report Abuse
kijan ஆர்.எஸ்.எஸ் .... தலைவர் சொன்னதுபோல தேசத்திற்கு ஒரு தந்தைதான் ...அவர் தான் அண்ணல் காந்தியடிகள் .... அதுபோல பகுத்தறிவின் தந்தை ....பெரியார் .... தமிழகம் பெரியார் மண் ....
Rate this:
Cancel
Chinnappa Pothiraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
01-அக்-202221:54:46 IST Report Abuse
Chinnappa Pothiraj வாசகர் திரு ரவிச்சந்திரன் கருத்து மிகவும் சரியானது.வாசகர்களே நண்பர்களே நாமெல்லோரும் பாரததிருநாட்டின் புதல்வர்கள் அதை ஒருபோதும் நாம் மறக்ககூடாது. தாய்த்திருநாட்டை உலகின் வளமான வலிமையான உலகெங்கிலுமுள்ள மக்கள் பெருமைமிகு நம் பாரதநாட்டின் மீது பற்றும் பாசமும் விரும்பும் அளவுக்கு தனித்துவம் தனிச்சிறப்புடன் திகழ ஒற்றுமையுடன் கூடி வாழ்வோம்.எத்தகைய சூழ்நிலையிலும் நம் நாட்டின் பாதுகாப்புவிசயத்திலும் தன்மானத்திலும்.விட்டுக்கொடுக்கமாட்டோம்.வந்தே மாதரம்,ஜெய்ஹிந்த்.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
01-அக்-202221:28:01 IST Report Abuse
NicoleThomson நீங்க பண்றதுல இருந்து அந்த இயக்கம் இன்னமும் பப்லிசிட்டி ஆயிடும் போலிருக்கே? நடத்துங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X