விரைவில் மின்னணு வன்பொருள் கொள்கை

Added : அக் 01, 2022 | |
Advertisement
சென்னை : தமிழ்நாடு மின்னணு வன்பொருள் கொள்கை, விரைவில் வெளியிடப்பட உள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திரா சிட்டியில், 1,100 கோடி ரூபாய் முதலீட்டில், 14 ஆயிரம் பேருக்கு, வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், 'பெகாட்ரான்' தொழிற்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதை நேற்று, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து பேசியதாவது:தைவான் நாட்டின் மிகப்பெரிய
Tamil Nadu, CM Stalin, Electronic Hardware Policy, தமிழ்நாடு, முதல்வர் ஸ்டாலின், பெகாட்ரான், Chief Minister Stalin, Pegatron, மின்னணு வன்பொருள் கொள்கை,



சென்னை : தமிழ்நாடு மின்னணு வன்பொருள் கொள்கை, விரைவில் வெளியிடப்பட உள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திரா சிட்டியில், 1,100 கோடி ரூபாய் முதலீட்டில், 14 ஆயிரம் பேருக்கு, வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், 'பெகாட்ரான்' தொழிற்சாலை அமைக்கப்பட்டு உள்ளது.



இதை நேற்று, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து பேசியதாவது:தைவான் நாட்டின் மிகப்பெரிய நிறுவனம் பெகாட்ரான். இந்நிறுவனம் தமிழகத்தில் 'ஸ்மார்ட் போன்' உற்பத்தி துவக்குவதை வரவேற்கிறேன். உலகப் புகழ்பெற்ற பிராண்ட், தமிழகத்தில் தயாராவது, தமிழகத்திற்கு கிடைத்த பெருமை.வெகு விரைவில், 'தமிழ்நாடு மின்னணு வன்பொருள் கொள்கை' வெளியிடப்பட உள்ளது. மத்திய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ், மின்னணுவியல் துறை சார்பில், விண்ணப்பம் சமர்பித்துள்ள நிறுவனங்களை, தமிழகத்திற்கு ஈர்க்க முயற்சிகள் நடந்து வருகின்றன.



மின்னணுவியல் துறை மட்டுமல்ல, எந்த துறையாக இருந்தாலும், அதில் தமிழகம் முன்னணி வகிக்க வேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு. முன்னணி அடைந்ததும், முதல் நிலையை நோக்கி உயர வேண்டும் என்பது குறிக்கோள்.இவ்வாறு அவர் பேசினார்.



விழாவில், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், தமிழக அமைச்சர் அன்பரசன், பெகாட்ரான் நிறுவன தலைவர் ஜெங் ஜியான் ஜாங், மேலாண்மை இயக்குனர் லின் ஜியு டேன் கலந்து கொண்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X