ஓசி பயணம் வேண்டாம் என்ற மூதாட்டி மீது வழக்குப்பதிவா? போலீஸ் மறுப்பு

Updated : அக் 01, 2022 | Added : அக் 01, 2022 | கருத்துகள் (35) | |
Advertisement
கோவை: பஸ்சில் ஓசி வேண்டாம்: டிக்கெட் கேட்டு வாக்குவாதம் செய்த மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக வெளியான தகவலை கோவை மாவட்ட எஸ்.பி., மறுத்துள்ளார். அது பொய்யான தகவல் எனக்கூறியுள்ளார்.கோவை காந்திபுரத்தில் இருந்து, கண்ணம்மநாயக்கனுார் செல்லும் அரசு பஸ்சில் குரும்பப்பாளையத்தைச் சேர்ந்த துளசியம்மாள், 70, பஸ்சில் ஏறினார்.நடத்துனர் வினித், துளசியம்மாளிடம்
ஓசிவேண்டாம், மூதாட்டி, அதிமுக, உறுப்பினர், 4பேர், பாய்ந்தது,  வழக்குப்பதிவு

கோவை: பஸ்சில் ஓசி வேண்டாம்: டிக்கெட் கேட்டு வாக்குவாதம் செய்த மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக வெளியான தகவலை கோவை மாவட்ட எஸ்.பி., மறுத்துள்ளார். அது பொய்யான தகவல் எனக்கூறியுள்ளார்.கோவை காந்திபுரத்தில் இருந்து, கண்ணம்மநாயக்கனுார் செல்லும் அரசு பஸ்சில் குரும்பப்பாளையத்தைச் சேர்ந்த துளசியம்மாள், 70, பஸ்சில் ஏறினார்.நடத்துனர் வினித், துளசியம்மாளிடம் பயணச்சீட்டு கொடுக்க வந்த போது தான் துவங்கியது இந்த உரையாடல்.


நடத்துனர்: எங்கம்மா போகணும்?


துளசியம்மாள்: பாலத்துறை.


நடத்துனர்: இந்தாம்மா டிக்கெட்.


துளசியம்மாள்: காசு வாங்கிக்கோ.


நடத்துனர்: காசெல்லாம் இல்லம்மா... 'ப்ரீ' தான்.


துளசியம்மாள்: காசு வாங்கலேன்னா, டிக்கெட் வேண்டாம். நான் 'ஓசி'யில வர மாட்டேன்.


நடத்துனர்: காசு வாங்க மாட்டேன் நானு.


துளசியம்மாள்: தமிழ்நாடே 'ஓசி'யில போகுது... நான் வர மாட்டேன்.


நடத்துனர்: அட... ஏம்மா தொந்தரவு பண்றீங்க.. துளசியம்மாள்: எனக்கு, 'ப்ரீ' வேண்டாம்.


துளசியம்மாளின் பிடிவாதத்தால், நடத்துனர் பயணச்சீட்டுக்கு உரிய தொகையை பெற்று, மீதி சில்லரை கொடுத்தார். உரையாடலுக்கு இடையே, பயணியர் பலர் துளசியம்மாளிடம் டிக்கெட் 'ப்ரீ' தான் என்று சொன்ன போதும், அவர் ஓசி பயணம் செய்ய விருப்பம் தெரிவிக்காமல், பயணச்சீட்டு வாங்கினார்.
latest tamil news


இதற்கிடையே, தி.மு.க., அரசுக்கு களங்கம் ஏற்படுத்த இச்செயலை செய்ததாக, அ.தி.மு.க.,வின் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் மீது தி.மு.க.,வினர் புகார் தெரிவித்துள்ளனர். துளசியம்மாளை துாண்டிவிட்டு, நடத்துனருடன் பிரச்னை செய்ய வைத்து, அதை வீடியோவாக பதிவிட்டு, சமூகவலைதளங்களில் தகவல் வெளியாதாக கூறப்படுகிறது.பொய் தகவல்:


திமுகவினர் அளித்த புகாரை தொடர்ந்து, மூதாட்டி துளசியம்மாள் மீது மதுக்கரை போலீஸ் ஸ்டேசனில் வழக்குப்பதிவு செய்ததாக தகவல் வெளியானது. ஆனால், கோவை மாவட்ட எஸ்.பி., பத்ரிநாராயணன் மறுத்துள்ளார். மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்ததாக வெளியான தகவல் பொய்யானது. கோவை மதுக்கரை உள்ளிட்ட மாவட்டத்தில் எந்த பகுதியிலும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை எனக்கூறியுள்ளார் .

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAAJAA -  ( Posted via: Dinamalar Android App )
02-அக்-202210:25:39 IST Report Abuse
RAAJAA ஒசியில் பயணிக்க அவமானமாக உள்ளதாம்... வேண்டாமே DELUX BUSல 3 மடங்கு பணம் கொடுத்து பயணம் செய்யலாமே.. நீங்க துட்டு பார்ட்டிங்க.. லட்ச ரூபாய் சம்பளம் வாங்குவீங்க... காசின் அருமை தெரியாது. ஓசி பஸ் உங்களைப் போன்றவர்களுக்கு அல்ல. தினக்கூலியில் 200 ரூ 300 ரூ. வேலைக்கு போகிறவர்களுக்கு இது வரப்பிரசாதம்.. 20ரூ. 30. மிச்சமானால் நொய் வாங்கி கஞ்சி போட்டு வயிற்றை நிரப்பிக் கொள்வார்கள்.. உங்களைப் போன்று PIZZA Corner சென்று ஆயிரம் ரூபாய்க்கு சாப்பிட முடியாதவர்கள்.. இவ்வளவு அவமானமாக கருதும் நீங்கள் TRAINல் சீசன் டிக்கட் வாங்காமல் தினம் தினம் டிக்கட் வாங்குவீங்களா? அரசு தரும் மற்ற சலுகைகளையும் விட்டுக் கொடுங்கள்.. அரசு சலுகைகளும் காசின் அருமையும் வாழ்க்கையில் வறுமை எட்டிப்பார்க்கும் போது தான் புரியும். மற்றவர்களிடம் சென்று தயக்கத்துடன் 100 ரூ. 200ரூ .... கை மாத்து வாங்கும் போது தெரியும் பணத்தின் அருமை.... எனவே தயவு செய்து பெருமை அடித்துக் கொள்ளாதீர்கள்....
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
01-அக்-202220:55:34 IST Report Abuse
Ramesh Sargam மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்தது உண்மை என்றால், அந்த வழக்கு வாபஸ் பெறப்படவேண்டும். மூதாட்டிக்கு ஒன்றும் ஆகாமல், அவருக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டியது காவல்துறையின் கடமை.
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
01-அக்-202219:46:24 IST Report Abuse
Cheran Perumal வழக்குப்பதிய போலீஸ் எல்லாம் தேவையில்லை. மாவட்ட செயலாளரின் ஒரு கண்ணசைவே போதும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X