" டிஜிட்டல் இந்தியா கனவை நிறைவேற்றும் 5ஜி " - பிரதமர் மோடி

Updated : அக் 01, 2022 | Added : அக் 01, 2022 | கருத்துகள் (26) | |
Advertisement
புதுடில்லி: டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தின் வெற்றியே 5ஜி. இந்த வருகையால் இந்தியாவின் வளர்ச்சி பாதையில் ஒரு மைல்கல் என்றும் , 5ஜி புதிய வரலாறு படைக்கிறது. இது முக்கியமான ஒரு நாள் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.டில்லியில் நடந்த இந்திய மொபைல் மாநாட்டில், 5ஜி சேவையை துவக்கி வைத்த பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சிங் மூலம் குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.தொடர்ந்து அவர்
5G India, PM Modi, Digital India, டிஜிட்டல் இந்தியா, பிரதமர் மோடி,  நரேந்திர மோடி,  Narendramodi, 5G, Reliance, JIO,  5ஜி,

புதுடில்லி: டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தின் வெற்றியே 5ஜி. இந்த வருகையால் இந்தியாவின் வளர்ச்சி பாதையில் ஒரு மைல்கல் என்றும் , 5ஜி புதிய வரலாறு படைக்கிறது. இது முக்கியமான ஒரு நாள் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.டில்லியில் நடந்த இந்திய மொபைல் மாநாட்டில், 5ஜி சேவையை துவக்கி வைத்த பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சிங் மூலம் குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.தொடர்ந்து அவர் பேசியதாவது: 5ஜி அறிமுகம் என்பது புதிய துவக்கம். 21ம் நூற்றாண்டின் வரலாற்று நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது. டெலிகாம் துறையில் 5ஜி தொழில்நுட்பம் புரட்சியை ஏற்படுத்தும்.5ஜி அறிமுகம் என்பது டெலிகாம் தொழில்துறை 130 கோடி இந்தியர்களுக்கு அளித்த பரிசாக அமைந்துள்ளது. 5 ஜி இந்தியாவின் வளர்ச்சியை காட்டுகிறது. நாட்டின் புதிய சகாப்தத்தை நோக்கிய ஒரு படியாகவும், எண்ணற்ற வாய்ப்புகளுக்கான துவக்கமாகவும் உள்ளது. புதிய இந்தியாவானது, தொழில்நுட்பத்தை வெறும் நுகர்வோராக பயன்படுத்தாது. அந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வளர்ச்சிக்கு பயன்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் . உலகளவில் தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா முன்னிலை வகிக்கும்.சாதனங்களின் விலை, டிஜிட்டல் இணைப்பு, டேடா விலை மற்றும் டிஜிட்டல் முதன்மை என்ற நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் டிஜிட்டல் இந்தியாவின் வெற்றி இருக்கும். அதன் அடிப்படையில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.latest tamil news5ஜி அறிமுகம் மூலம் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உலகளவிலான தரத்தை இந்தியா எட்டியுள்ளது. டிஜிட்டல் இந்தியா என்பது இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டம். நாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். 2ஜி, 3ஜி, 4ஜி க்காக இந்தியா வெளிநாடுகளை சார்ந்திருந்தது. ஆனால், 5ஜி மூலம் இந்தியா புதிய வரலாற்றை படைத்துள்ளது. கடந்த 2014ல் 2 மொபைல்போன் உற்பத்தி தொழிற்சாலை இருந்த நிலையில், இன்று 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.முன்பு, ஒரு ஜிபி டேடாவின் விலை ரூ.300 ஆக இருந்தது. தற்போது, ஒரு ஜிபி ரூ.10 ஆக குறைந்துள்ளது. சராசரியாக, இந்தியாவில் ஒரு நுகர்வோர் 14 ஜிபி பயன்படுத்துகிறார். இதனால், மாதத்திற்கு ரூ.4,200 செலவு ஏற்படும் நிலையில், அரசின் முயற்சியால் ரூ.125- 150 ஆக உள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.
2023ல் நாடு முழுவதும்


இந்த விழாவில் ரிலையன்ஸ் சேர்மன் முகேஷ் அம்பானி பேசியதாவது:


latest tamil news


5ஜி சேவை இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்திய தொலைத்தொடர்புத்துறை தலைமை வகிக்க தயாராக உள்ளது.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தலைமையகமாக இந்தியாவை மாற்றும். செயற்கை நுண்ணறிவு, இன்டர்நெட் ஆப் திங்ஸ், ரோபாட்டிக்ஸ், பிளாக்செயின் & மெட்டாவர்ஸ் போன்ற 21 ஆம் நூற்றாண்டின் பிற தொழில்நுட்பங்களின் முழு திறனையும் அதிகரிக்கும் அடிப்படை தொழில்நுட்பமாக 5ஜி இருக்கும். 2023 டிச., இறுதிக்குள் நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் 5ஜி சேவை கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.8 நகரங்களில்


பார்தி எண்டர்பிரைசஸ் சேர்மன் சுனில் மிட்டல் பேசியதாவது


latest tamil news


இன்றைய நாள் முக்கியமான நாள். புதிய சகாப்தம் துவங்குகிறது. இந்த துவக்கம், இந்தியாவின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் நடக்கிறது. புதிய உற்சாகத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும். மக்களுக்கு ஏராளமான புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும். இவ்வாறு அவர் பேசினார்.


மும்பை, வாரணாசி, பெங்களூரு, புதுடில்லி உள்ளிட்ட 8 நகரங்களில் முதல்கட்டமாக சனிக்கிழமை முதல் 5ஜி சேவை கிடைக்கும் என ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
01-அக்-202223:34:42 IST Report Abuse
venugopal s 5 ஜி என்றால் மோடிஜி, அமித்ஷாஜி, யோகிஜி, அண்ணாமலைஜி, நட்டாஜி தானே? ஐந்துமே வேஸ்ட் ஜி க்கள் ஆயிற்றே!
Rate this:
Cancel
K.n. Dhasarathan - chennai,இந்தியா
01-அக்-202222:43:23 IST Report Abuse
K.n. Dhasarathan எல்லாம் சரி, b.s.n.l. க்கு ஏன் இன்னும் 5G கொடுக்கவில்லை, இதுதான் நாட்டை வளர்க்கும் லட்சணமா? வேறு யாருக்கோ கொடுப்பதுதான் அரசு விழாவா? தனியார் வாங்கினால் அவர் வீட்டில் விழா வைக்கலாமே எதெற்கு மக்கள் பணத்தை இறைக்க வேண்டும்?
Rate this:
Cancel
01-அக்-202220:09:55 IST Report Abuse
அப்புசாமி உங்கள் வீட்டு வைஃபை வசதிகளை அக்கம் பக்கத்தினருடன் பகிர்ந்து கொண்டு செலவையும் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் போனில் வாட்சப்பை வைத்துக்கொண்டு, சிம்கார்டில் மினிமம் சார்ஜ் செய்து கொண்டு பணத்தை செலவு செய்யுங்கள். நீங்கள்.கடை வைத்திருந்தால் வாடிக்கையாளர்களுக்கு ஃப்ரீ வைஃபை வசதி செய்து குடுங்கள். அவர்களது டேட்டா பயன்பாட்டை குறைக்க உதவுங்கள். இந்த மொபைல் கம்பெனிகளின் கொட்டத்தை அடக்க இதுதான் வழி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X