அரசு வழங்கும் விருதுகளில் தலைவர் படம் தேவையா?

Updated : அக் 02, 2022 | Added : அக் 01, 2022 | கருத்துகள் (33) | |
Advertisement
சென்னை: தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திரைப்பட விருதுகள் வழங்கப்படும். இது சில ஆண்டுகளாக தடைபட்ட நிலையில், கடந்த 2009 முதல் 2014ம் ஆண்டுகளுக்கான விருதுகள், செப்.,4ல் வழங்கப்பட்டன. சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில், அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், சேகர்பாபு, வெள்ளக்கோவில் சுவாமிநாதன், மேயர் பிரியா ஆகியோர் வழங்கினர். இந்த விழாவில், ஏராளமான திரைக்கலைஞர்கள்
award, national award, film, leaders, தேசியவிருது, தமிழ் திரைப்பட விருது, கருணாநிதி, ஸ்டாலின், ஜனாதிபதி

சென்னை: தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திரைப்பட விருதுகள் வழங்கப்படும். இது சில ஆண்டுகளாக தடைபட்ட நிலையில், கடந்த 2009 முதல் 2014ம் ஆண்டுகளுக்கான விருதுகள், செப்.,4ல் வழங்கப்பட்டன.



latest tamil news



சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில், அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், சேகர்பாபு, வெள்ளக்கோவில் சுவாமிநாதன், மேயர் பிரியா ஆகியோர் வழங்கினர். இந்த விழாவில், ஏராளமான திரைக்கலைஞர்கள் நேரில் விருதுகளை பெற்று கொண்டனர். அதனுடன் வழங்கப்பட்ட சான்றிதழில் தமிழக அரசு சின்னத்துடன் மறைந்த முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் படமும் இடம்பெற்றிருந்தது.



latest tamil news


அதேநேரத்தில், நேற்று டில்லியில் 68 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடந்தது. சிறந்த நடிகர், நடிகையர், இயக்குநர் என பலதரப்பட்ட கலைஞர்களுக்கு தேசிய விருதினை ஜனாதிபதி வழங்கினார். ஜனாதிபதி விருதுடன் வழங்கிய சான்றிதழில், இந்திய அரசின் சின்னம் மட்டுமே இடம்பெற்றிருந்தது. எந்த தலைவர்களும் இடம்பெறவில்லை.



latest tamil news


இதனை கவனித்த நெட்டிசன்கள், அரசின் செலவில் நடந்த விழாவில், தமிழக அரசின் சான்றிதழில் தலைவர்கள் படம் இடம்பெற்றதையும், மத்திய அரசு சான்றிதழில் அரசின் சின்னம் மட்டும் இடம்பெற்றதையும் சுட்டிக்காட்டியதுடன் , கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chinnaa - Theni ,இந்தியா
02-அக்-202221:20:49 IST Report Abuse
Chinnaa அரசு கொடுப்பது குடியரசு தலைவர்,அதுபோல் ஆளுநர் கொடுத்தால் அதில் மாநில முதலமைச்சர் படம் இருக்காது.குடியரசு தலைவர் கொடுப்பது அரசியலமைப்பு,முதலமைச்சர் கொடுப்பது அரசாங்க அமைப்பு.முதலில் அதை புரிந்து கொண்டு இதுபோல் செய்தியை பரப்பவும்.
Rate this:
Cancel
Chinnaa - Theni ,இந்தியா
02-அக்-202221:16:46 IST Report Abuse
Chinnaa ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளவும்,அரசு,அரசாங்கம்? இங்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஸ்டாலின்,அப்படி என்றால் மத்திய அரசு சார்பில் ஏன் பிரதமர் மோடி இல்லை? செய்தி பரப்பாளர்கள்(ஊடகங்கள்),கருத்து தெரிவிப்பவர்கள் கவனத்திற்கு,ஒன்றிய அரசு கொடுப்பது அரசியல் அமைப்பு,தமிழ்நாடு அரசு கொடுப்பது,அரசாங்க அமைப்பு.தமிழ்நாட்டில் அரசியலமைப்பில் கொடுத்தால் அதை தமிழ்நாடு அரசு முத்திரையுடன் ஆளுநர்(கவர்னர்)கொடுப்பர்.
Rate this:
Cancel
02-அக்-202204:50:18 IST Report Abuse
ராஜா அந்த விருதுக்கு மரியாதை அவ்வளவு தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X