தினம் ஒரு பாக்கெட் சிகரெட் பிடிப்பவரா? - ரூ.1 கோடியை சாம்பலாக்குகிறீர்கள்!

Updated : அக் 01, 2022 | Added : அக் 01, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
புகைப் பழக்கம் உடல் நலத்திற்கு கடுமையான கேடு விளைவிக்கக் கூடிய ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அது நமது நிதி நிலைமையில் எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை சின்ன கணக்கின் மூலம் பார்க்கலாம். ஏன் சிகரெட்டை விட கடினமாக உள்ளது? சிகரெட் பிடிப்பவர்களுக்கு அதன் ஆபத்துக்கள் அனைத்தும் தெரிந்தே உள்ளன. தினமும் நிறைய சிகரெட்களை ஊதித்
Smoking, cigarette, புகைப்பழக்கம், Investment, 1Crore, SIP, சேமிப்பு, HealthyLifestyle

புகைப் பழக்கம் உடல் நலத்திற்கு கடுமையான கேடு விளைவிக்கக் கூடிய ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அது நமது நிதி நிலைமையில் எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை சின்ன கணக்கின் மூலம் பார்க்கலாம்.


ஏன் சிகரெட்டை விட கடினமாக உள்ளது?latest tamil news


சிகரெட் பிடிப்பவர்களுக்கு அதன் ஆபத்துக்கள் அனைத்தும் தெரிந்தே உள்ளன. தினமும் நிறைய சிகரெட்களை ஊதித் தள்ளுபவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய், மூளையில் கட்டி, ரத்த அழுத்தம் என பல பாதிப்புகள் ஏற்பட்டு மத்திய வயதில் தினசரி வாழ்க்கையே நரகமாக கழியும் என்பதை அறிந்துள்ளனர். இருந்தாலும் சிகரெட்டை உள்ளிழுக்கும் போது மூளையை சென்றடைந்து டோபமைனைச் சுரக்கச் செய்யும் நிகோடின், எதையோ சாதித்த உணர்வை வழங்குகிறது. இந்த உணர்வு மீண்டும் மீண்டும் அதனை தேடிச் செல்ல வைக்கிறது.


சிகரெட்டை விட்டால் ரூ.1 கோடி கிடைக்கும்latest tamil news


30 வயதில் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் சிகரெட் பிடிக்கிறீர்கள் எனில், அதன் விலை ரூ.170. மாதம் ரூ.5,100 ஆகிறது. சிகரெட் பிடிக்காத ஒரு நபர் இதே 5,100 ரூபாயை ஆண்டுக்கு 10 சதவீத கூட்டு வட்டி எதிர்பார்க்கக் கூடிய மியூட்சுவல் பண்ட் எஸ்.ஐ.பி., திட்டங்களில் போட்டு வந்தால் அடுத்த 30 ஆண்டுகள் முடிவில் அவரிடம் ரூ.1 கோடியே 6 லட்சம் இருக்கும். அது தான் ஆண்டு கூட்டு வளர்ச்சி விகிதத்தின் அதிசயம். முதலீடு செய்தது ரூ.18.3 லட்சம் தான். ஆனால் அது தந்த ரிட்டர்ன் ரூ.87.7 லட்சமாக இருக்கும். சிகரெட் விலை ஆண்டுக்கு ஆண்டு உயர்கிறது. அதன் படி மாதாந்திர எஸ்.ஐ.பி.,யை உயர்த்தினால் மேலும் சில லட்சங்கள் வங்கி கணக்கில் சேர்ந்திருக்கும்.


latest tamil news


சரி சிகரெட்டை முற்றாக விடுவதற்கு கடினமாக இருக்கிறது. பாதியாக குறைத்துக்கொள்கிறேன் என்கிறீர்களா. அப்படி பார்த்தால் மாதம் ரூ.2,550 மிச்சமாகும். அதனை அப்படியே 30 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் முதலீடு செய்து வந்தால், அது 10% ரிட்டர்ன் வழங்கினால். உங்களிடம் ரூ.53 லட்சம் இருக்கும். முதலீடு செய்த தொகை ரூ.9.8 லட்சம் தான்.


சிகரெட்டை விடுவதற்கு இதனை முயற்சியுங்கள்!latest tamil news


அடுத்த 10 நாட்களுக்குள் ஒரு தேதியை நிர்ணயித்து அன்றிலிருந்து புகைப்பதை விடுவது என முடிவு செய்யுங்கள். இந்த 10 நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக சிகரெட்டை குறைத்து மனதை தயார்ப்படுத்துங்கள்.

சிகரெட்டை விடப் போகிறேன் என குடும்பத்தினர், நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள். குறிப்பாக இந்த முயற்சிக்காக உங்களை உற்சாகப்படுத்துபவர்களிடம் தெரிவியுங்கள்.

சிகரெட்டை விடும் பலரும் 3 மாதங்களில் மீண்டும் அவற்றை தொடங்கிவிடுகின்றனர். எனவே நீங்கள் எப்போது ஜாக்கிரதை உணர்வுடன் இருங்கள். சிகரெட் தேவை எழும் போது சுடு தண்ணீர் குடியுங்கள்.

புகையிலை பொருட்கள் எதுவுமே வீட்டில், அலுவலகத்தில், கார், பைக்குகளில் இருக்கக் கூடாது. காலி பாக்கெட் கூட இருக்கக் கூடாது. ஆஷ்ட்ரே, லைட்டர்ஸ் என அனைத்தையும் அப்புறப்படுத்துங்கள். சிகரெட் பிடிக்காமல் மிச்சமாகும் பணத்தை இன்றே, இப்பொழுதே முதலீடு செய்யத் தொடங்குங்கள்.

இவை எல்லாம் எழுதிப் பார்ப்பதற்கு எளிது தான். கடைப்பிடிப்பது என்பது போருக்கு தயாராவதைப் போன்று. அதனை கடைப்பிடித்து நிறுத்திவிட்டால் உங்களைப் போன்ற சிறப்பான நபர் யாரும் இல்லை. ஆரோக்கியமான, ஆடம்பரமான எதிர்காலத்திற்கு இதனை முயற்சித்துத் தான் பாருங்களேன்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
01-அக்-202220:05:32 IST Report Abuse
Ramesh Sargam அடுத்த 30 ஆண்டுகள் முடிவில் அவரிடம் ரூ.1 கோடியே 6 லட்சம் இருக்கும். அதன்பிறகுதான் அவர்கள் ஆனந்தமாக இருக்க முடியும். ஆனால், தினம் தினம் புகைப்பதால் - ஆஹா என்ன ஆனந்தம், என்று நான் கூறவில்லை. புகைப்பவர்கள் கூறுகிறார்கள்.
Rate this:
Cancel
01-அக்-202220:01:30 IST Report Abuse
அப்புசாமி வந்தவர்:டாக்டர் டாக்டர் ...டாக்டர்: என்னய்யா என்ன உடம்பு?வந்தவர்:அது ஒண்ணுமில்ல டாக்டர், நான் நூறு வயசு வாழணும்.டாக்டர்: வெத்தலை பாக்கு போடுவியா?வ: இல்லை டாக்டர்.டா: ஸ்வீட், காரம் சாப்புடுவியா?வ: இல்லை டாக்டர்.டா: பீடி, சிகரெட்?வ: நோ..நோ டாக்டர்.டா: தண்ணி போடுவியா?வ: ஐயோ... ஒண்ணும் கிடையாது டாக்டர்.டா: பொம்ம்பள விஷயம்?வ: கடவுளே.. அப்பிடியெல்லாம் கிடையாது டாக்டர்?டா: அப்புறம் எதுக்குய்யா நூறு வருஷம் வாழணும்?இப்பவே போய்ச்சேரு.நீதி: எதையும் அளவுடன் அனுபவித்து ஆனந்தமுடன் வாழவும்.
Rate this:
Cancel
Krishnan - Chennai,யூ.எஸ்.ஏ
01-அக்-202218:58:39 IST Report Abuse
Krishnan Our body parts that gets damaged due to smoking is worth more than 1 crore. Lungs, Mouth, Neck to Teeth treatment long term costs easily 1 crore.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X