ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் கார்கே

Updated : அக் 01, 2022 | Added : அக் 01, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த மல்லிகார்ஜூன கார்கே, கட்சி கொள்கைப்படி ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக, சோனியாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் சசி தரூரை எதிர்த்து, சோனியா குடும்பத்தின் தீவிர விசுவாசியான மல்லிகார்ஜூன கார்கே களமிறக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று
Mallikarjun Kharge, Congress, congress President,  Quit, Rajya Sabha, மல்லிகார்ஜூன கார்கே, ராஜ்யசபா, காங்கிரஸ், ராஜினாமா,

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த மல்லிகார்ஜூன கார்கே, கட்சி கொள்கைப்படி ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக, சோனியாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.



காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் சசி தரூரை எதிர்த்து, சோனியா குடும்பத்தின் தீவிர விசுவாசியான மல்லிகார்ஜூன கார்கே களமிறக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.



latest tamil news


இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை அடிப்படையில், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள மல்லிகார்ஜூன கார்கே, அதற்கான கடிதத்தை சோனியாவிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து புதிய ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய வேண்டியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-அக்-202223:01:21 IST Report Abuse
kulandai kannan இன்றைய தேதியில் கார்கேவுக்கு இருந்ததே ஒரு பதவி தானே. அதை ஏன் ராஜினாமா செய்தார்? எல்லாமே மாய்மாலம்தான்.
Rate this:
Cancel
01-அக்-202221:28:11 IST Report Abuse
theruvasagan உள்ளதும் போச்சா. சோனமுத்தா.
Rate this:
Cancel
01-அக்-202221:21:51 IST Report Abuse
சிந்தனை காங்.க்கு சமாதி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X