புதுடில்லி: பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. சட்டரீதியான கோரிக்கை ஏற்று இந்தியாவில் இப்பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. உள்நாட்டு சட்டங்களை மீறும் வகையில், கருத்துகள் இடம்பெற்றதால், மத்திய அரசு அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கையை டுவிட்டர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.