புதுடில்லி: கடந்த ஆண்டு(2021) செப்., மாதத்தை விட இந்தாண்டு செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் 26 சதவீதம் அதிகரித்து, ரூ.1,47 லட்சம் கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வசூலானது தொடர்ந்து 7 மாதங்களாக ரூ.1.40 லட்சம் கோடியை தாண்டி வருகிறது. செப்., மாதம் ரூ.1,47,686 கோடி வசூலாகி உள்ள நிலையில்

அதில்
சிஜிஎஸ்டி - ரூ. 25,271 கோடி,
எஸ்ஜிஎஸ்டி - ரூ. 31,813 கோடி,
ஐஜிஎஸ்டி -ரூ. 80,464 கோடி (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ. 41,215 கோடி உட்பட)
செஸ் -ரூ. 10,137 கோடி ( பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ. 856 கோடி உட்பட) அடங்கும் எனக்கூறப்பட்டுள்ளது.


