கழுத்தை நெரிக்கும் சுற்றுலா இஎம்ஐ; ஹனிமூன் தம்பதிகள் உஷார்!

Updated : அக் 01, 2022 | Added : அக் 01, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
இன்றைய காலத்தில் உலக சுற்றுலாவுக்கு இந்திய நடுத்தர வர்க்கம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. குறிப்பாக புதுமணத் தம்பதிகள் பிரான்ஸ், கிரீஸ், ஆஸி., தாய்லாந்து உள்ளிட்ட இடங்களுக்கு ஹனிமூன் செல்ல அதீத ஆர்வம் காட்டுகின்றனர். இதுபோன்ற உலக சுற்றுலாவுக்கு குறைந்தபட்சம் 4-5 லட்ச ரூபாய் செலவாகும். இந்திய நடுத்தர வர்க்க மக்கள் கொரோனா காலத்தை அடுத்து திருமண செலவுகளை கணிசமாகக்
தவணை சுற்றுலா, சுற்றுலா இஎம்ஐ, tour emi, honeymoon loan, honeymoon debt, pv

இன்றைய காலத்தில் உலக சுற்றுலாவுக்கு இந்திய நடுத்தர வர்க்கம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. குறிப்பாக புதுமணத் தம்பதிகள் பிரான்ஸ், கிரீஸ், ஆஸி., தாய்லாந்து உள்ளிட்ட இடங்களுக்கு ஹனிமூன் செல்ல அதீத ஆர்வம் காட்டுகின்றனர். இதுபோன்ற உலக சுற்றுலாவுக்கு குறைந்தபட்சம் 4-5 லட்ச ரூபாய் செலவாகும்.

இந்திய நடுத்தர வர்க்க மக்கள் கொரோனா காலத்தை அடுத்து திருமண செலவுகளை கணிசமாகக் குறைத்துவிட்ட நிலையில் திருமண பட்ஜெட்டில் மிச்சமாகும் பணத்தை ஹனிமூன் செல்ல பயன்படுத்த நினைக்கின்றனர். இதனை அறிந்துகொண்ட சுற்றுலா நிறுவனங்கள் பல, தற்போது சுற்றுலா தவணை திட்டத்தை அறிமுகப்படுத்தத் துவங்கிவிட்டன. திருமணக் கடன் எடுத்த காலம்போய் தற்போது தேனிலவு கடன் எடுக்கும்காலம் வந்துவிட்டது.


latest tamil newsநான்கு லட்ச ரூபாய் சுற்றுலா பட்ஜெட்டில் இரண்டு லட்சம் கையில் இருந்தால் மீதம் இரண்டு லட்சத்தை கடன் வாங்கி பின்னர் இஎம்ஐ கட்டி கடனை அடைத்துவிடலாமே, எது எதற்கோ இஎம்ஐ கட்டுகிறோம். வாழ்வில் ஒருமுறை செல்லும் ஹனிமூனுக்கு இஎம்ஐ கட்டினால் என்ன என பெரும்பாலான நடுத்தர வர்க்க புதுமணத் தம்பதிகள் நினைக்கின்றனர்.

கிரெடிட் கார்டு பயனாளர்கள் பலரும் இந்த சுற்றுலாக் கடன் வசதியால் அதிகமாக ஈர்க்கப்படுகின்றனர். வெளிநாட்டு சுற்றுலாவை நடுத்தர வர்க்க மக்களுக்கு சாத்தியப்படுத்தும் நோக்கில் இந்த இஎம்ஐ திட்டத்தை அறிவிப்பதாக சுற்றுலா நிறுவனங்கள் மார்தட்டிக்கொள்கின்றன. ஆனால் இது ஒரு மாயவலை என்பதை இதில் விழும் பலர் அறிவதில்லை.

கிரெடிட் கார்டு வாங்கும் எந்த நபரும் தான் எதிர்காலத்தில் ஓர் ஷாப்பிங் மேனியாக் ஆக மாறுவோம் என்பதை உணர்வதில்லை. அதேபோல சுற்றுலா இஎம்ஐ பெரும், பெரும்பாலான புதுமணத் தம்பதிகள் திருமணம் முடிந்து அடுத்த சில ஆண்டுகளில் இந்தக் கடனைக் கட்ட முடியுமா என அப்போது சிந்திப்பதில்லை.


latest tamil newsஇந்த வலையில் பெரும்பாலும் கீழ் நடுத்தர வர்க்க மக்களே சிக்கிக்கொள்கின்றனர். இவர்களது மாத வருமானத்தில் சேமிப்பு என்று எதையுமே ஒதுக்கி வைக்க முடியாமல் தவிக்கும் நிலையில் இந்த சுற்றுலா இஎம்ஐ திட்டத்தையும் இழுத்து விட்டுக்கொள்கின்றனர்.

திருமணமாகி அடுத்த ஆண்டே குழந்தை பிறந்தால் அதற்கு உண்டான செலவுகள், பிறக்கவில்லை என்றால் ஐவிஎஃப் உள்ளிட்ட செயற்கை கருத்தரிப்பு முறைக்கான செலவு, இதர மாத செலவுகள் என எதையும் சிந்திக்காமல் பலர் இந்த சுற்றுலா இஎம்ஐ வலையில் விழுவதால் இவர்களது அன்றாட வாழ்க்கை நரகமாகிறது. பொருளாதார சிக்கலால் கணவன், மனைவிக்கிடையே சிறு உரசல்கள் ஏற்பட்டு அது பெரும் விரிசலுக்கு வழி வகுக்கும்.

பல்லைக் கடித்துக்கொண்டு சில மாதங்கள் இஎம்ஐ கட்டிவிடலாம் என நினைத்து பலர் இந்த திட்டத்தை ஏற்கின்றனர். புதுமணத் தம்பதிகளுக்கு தங்கள் வாழ்வில் அடுத்த இரண்டு ஆண்டுகளில்தான் செலவுகள் அதிகரிக்கும் என்பதை உணருவதில்லை. திருமணம் செய்யப் போகிறீர்கள் என்றால் கையில் சில ஆயிரங்கள் முதல் லட்சங்கள் வரை சேமிப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை நம் வீட்டுப் பெரியவர்கள் பலர் நமக்கு அறிவுறுத்தி இருப்பர்.


latest tamil newsஇதுபோன்று பணத்தை சேமித்து வைத்தால் சேமிப்பின் மூலமாகவே உங்களது உலக சுற்றுலாக் கனவை நனவாக்க முடியும் என்பதை உணரவேண்டும். மேலும் மாதாமாதம் கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லை இன்றி நிம்மதியாக வாழலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-அக்-202210:17:28 IST Report Abuse
அப்புசாமி இப்ப என்ன கடன் வாங்கி ஹனிமூனுக்கு அவசரம்? 50 வயசுக்கப்புறம், ஹனிமூன் போயி ஐம்பதிலும் ஆசைவரும்னு பாடிக்கிட்டே ஹனீமூன் போகலாம்.
Rate this:
Cancel
02-அக்-202209:47:31 IST Report Abuse
ஆரூர் ரங் வெள்ளை காலர் பணியில் உள்ளவர்களது திருமணங்களில் பாதி தோல்வியில் முடிந்து முதல் ஆண்டிலேயே பிரிந்து போய் விடுகின்றனர். 😊😉😉 தேனிலவு நினைவுகள் மட்டுமே மிச்சம். அப்புறம் அந்த EMI கசக்கவே செய்யும்.
Rate this:
Cancel
02-அக்-202207:22:29 IST Report Abuse
அப்புசாமி உங்க பணத்தையெல்லாம் செலவழிக்காம வாயைக்கடி வயத்தைக் கட்டி 70 வயது வரை சேமிச்சு வையுங்க. ஒரு கோடி ரூவா தேறும். அப்போ ஜாலியா கணவன் மனைவி ஹனிமூன் போயிட்டு வாங்க. 2047 தான் டார்கெட்டா இருக்கணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X