5ஜி-யால் தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.15 லட்சமாகும்: அம்பானி கணிப்பு!

Updated : அக் 01, 2022 | Added : அக் 01, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
2047-க்குள் இந்தியாவை 40 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற்ற 5ஜி தொழில்நுட்பம் உதவும், தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்வதன் மூலம் இது நடக்கும், என்று இந்திய மொபைல் மாநாட்டின் துவக்க நிகழ்வில் ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.டில்லி பிரகதி மைதானத்தில் இன்று (அக்.,1) இந்திய மொபைல் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர்
5Gindia, Mukesh Ambani, PM Modi, முகேஷ் அம்பானி, பிரதமர் மோடி, 5ஜி, அம்பானி, ஜியோ, 5G, Ambani, Jio,  5G Technology,

2047-க்குள் இந்தியாவை 40 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற்ற 5ஜி தொழில்நுட்பம் உதவும், தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்வதன் மூலம் இது நடக்கும், என்று இந்திய மொபைல் மாநாட்டின் துவக்க நிகழ்வில் ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

டில்லி பிரகதி மைதானத்தில் இன்று (அக்.,1) இந்திய மொபைல் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்தார். 4ஜி தொழில்நுட்பம் நொடிக்கு 60 முதல் 70 மெகாபைட் டேட்டாவை கடத்தும் திறன் கொண்டவை. 5ஜி அதை விட வேகமானது. நொடிக்கு 100 மெகாபைட் டேட்டாவை கடத்தும் திறன் பெற்றவை. ஆனால் யதார்த்ததில் இது மாறுபடும். 5ஜி சேவை, முதல்கட்டமாக சென்னை, பெங்க்ளூரு, மும்பை, கோல்கட்டா, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் கிடைக்கும்.

இந்நிலையில் இந்திய மொபைல் மாநாட்டில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி பேசியதாவது: தொலைத்தொடர்பு சேவைகளின் அடுத்தக்கட்டம் நாட்டின் வளர்ச்சியை விரைவுப்படுத்தும் இலக்கிற்கு உதவும். தனிநபர் வருமானம் ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயரும். 5ஜி ஒரு டிஜிட்டல் காமதேனு என்று சொன்னால் மிகையாகாது. நாம் விரும்புவதை வழங்கும் தேவலோக பசு அது. பி.எஸ்.என்.எல்லை வலுப்படுத்தும் மத்திய அரசையும், அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவையும் பாராட்ட விரும்புகிறேன். முக்கியத் துறையில் வலுவான பி.எஸ்.என்.எல்., சமநிலையை கொண்டு வரும்.


latest tamil news


ஜியோவின் பெரும்பாலான 5ஜி தொழில்நுட்ப சாதனங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. தன்னிறைவு இந்தியா முத்திரையை அவை கொண்டுள்ளன. இந்தியா கொஞ்சம் தாமதமாக 5ஜியை தொடங்கியிருந்தாலும், இந்தியாவின் நீள அகலம் முழுவதும் 5ஜி சேவைகளை நாங்கள் முதலில் முடிப்போம் என உறுதியளிக்க விரும்புகிறேன். உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் மிக உயர்ந்த தரம் மற்றும் மிக மலிவு விலையினை நாங்கள் உறுதி செய்வோம். 5ஜியால் மருத்துவமனைகள் ஸ்மார்ட் மருத்துவமனைகளாக மாறும். இதன் மூலம் தரமான மருத்துவ சேவையை கிராமப்புறங்களுக்கு வழங்க முடியும். 5ஜி நகர்ப்புற மற்றும் கிராமப்புற இந்தியாவிற்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்க முடியும்.

பெரிய பெரிய நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிற கருவிகளை 5ஜி சிறிய அளவிலான தொழில்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு கிடைக்கச் செய்யும். ஒவ்வொரு களத்திலும் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு வந்தால், 5ஜி இந்தியாவை உலகின் அறிவுத் தலைநகராக மாற்றும். இது இந்தியாவை அதிக மதிப்பு கூட்டப்பட்ட டிஜிட்டல் சேவைகளின் முக்கிய ஏற்றுமதியாளராக மாற்றும். இவ்வாறு பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
02-அக்-202213:56:07 IST Report Abuse
அசோக்ராஜ் சத்தமா சொல்லாதீங்க. தடுப்புக்கு அந்தாண்டை நிர்மலாம்மா கணக்கு நோட்டோட நிக்கறாங்க.
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
02-அக்-202201:40:33 IST Report Abuse
Aarkay உழைத்தால் என்று குறிப்பிடவும். இல்லையென்றால் எங்கள் உ.பி.,க்கள் மல்லாக்க படுத்து பாக்கெட்டை திறந்துவைத்துக்கொண்டு அண்ணாந்து பார்த்து 15 லட்சம் எங்கே? 15 லட்சம் எங்கே என கேட்பார்கள்.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
01-அக்-202223:32:52 IST Report Abuse
Mohan இதுக்கெல்லாம் காரணம் 8வருஷத்துக்கு முன் நாங்க கண்டெடுத்த 1ஜி தாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X