இந்தியாவில் விவசாயம் செய்ய அமெரிக்க தம்பதி விருப்பம்

Added : அக் 01, 2022 | |
Advertisement
பல்லடம்:பல்லடத்தில் ஆய்வு மேற்கொண்ட அமெரிக்க தம்பதி, இந்திய குடிமக்களாக மாறி விவசாயம் செய்வதற்கு ஆர்வம்தெரிவித்துள்ளனர்.அமெரிக்க ராணுவம் மற்றும் விமானப்படையில் வேலை பார்த்த, ஜிம் பிளாகஸ்லீ, 56, டெப்பி, 53, தம்பதிதமிழகத்தை சுற்றிப்பார்க்க வந்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம், பல்லடம் வந்த இருவரையும், 'வனம்' அமைப்பின் செயல் தலைவர் பாலசுப்பிரமணியம், துரைசாமி ஆகியோர்
இந்தியாவில் விவசாயம் செய்ய அமெரிக்க தம்பதி விருப்பம்

பல்லடம்:பல்லடத்தில் ஆய்வு மேற்கொண்ட அமெரிக்க தம்பதி, இந்திய குடிமக்களாக மாறி விவசாயம் செய்வதற்கு ஆர்வம்தெரிவித்துள்ளனர்.


அமெரிக்க ராணுவம் மற்றும் விமானப்படையில் வேலை பார்த்த, ஜிம் பிளாகஸ்லீ, 56, டெப்பி, 53, தம்பதிதமிழகத்தை சுற்றிப்பார்க்க வந்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம், பல்லடம் வந்த இருவரையும், 'வனம்' அமைப்பின் செயல் தலைவர் பாலசுப்பிரமணியம், துரைசாமி ஆகியோர் வரவேற்றனர்.


அங்குள்ள விவசாய தோட்டங்களை பார்வையிட்ட ஜிம் பிளாகஸ்லீ கூறியதாவது:அமெரிக்க ராணுவ படையில், 20 ஆண்டு பணிபுரிந்துள்ளேன். மனைவி டெப்பி, 10 ஆண்டுகள் விமானப் படையில் பணி புரிந்துள்ளார்.காதலித்து திருமணம் செய்து கொண்ட நாங்கள், இந்தியாவின் மீது மிகுந்த விருப்பம் கொண்டுள்ளோம்.பணியிலிருந்து ஓய்வு பெற்றபின், அமெரிக்காவில், 40 ஏக்கரில் விவசாயம் செய்கிறோம்.


கொரோனா காலத்தில் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து யோகா பயிற்சி மூலம் மீண்டு வந்தோம். இதற்கு, இந்தியாவைச் சேர்ந்தவர் உதவினார்.இப்பகுதியில் நடக்கும் தென்னை விவசாயம், நீரா உற்பத்தி குறித்தும் தெரிந்து கொண்டோம். தமிழகத்தின் நாகரிகம், பழக்க வழக்கம், உடை, கலாசாரம் மிகவும் பிடித்துள்ளது. இந்தியாவிலேயே தங்கி, இந்திய குடிமக்களாக விவசாயம் செய்ய விரும்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X