'பாப்புலர் பிரன்ட்' அலுவலகத்திற்கு 'சீல்!'

Added : அக் 01, 2022 | |
Advertisement
சென்னை:சென்னை புரசைவாக்கத்தில் உள்ள, 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' என்ற பி.எப்.ஐ., தமிழக தலைமை அலுவலகத்திற்கு, போலீசார் 'சீல்' வைத்தனர்.கடந்த மாதம் 22ம் தேதி, பி.எப்.ஐ., நிர்வாகிகள் அலுவலகங்கள், வீடுகளில் நடத்திய சோதனையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும், அந்த அமைப்பை சேர்ந்த, 11 பேர் கைது செய்யப்பட்டனர்.இதையடுத்து, பி.எப்.ஐ., மற்றும் அதன்
'பாப்புலர் பிரன்ட்' அலுவலகத்திற்கு 'சீல்!'

சென்னை:சென்னை புரசைவாக்கத்தில் உள்ள, 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' என்ற பி.எப்.ஐ., தமிழக தலைமை அலுவலகத்திற்கு, போலீசார் 'சீல்' வைத்தனர்.

கடந்த மாதம் 22ம் தேதி, பி.எப்.ஐ., நிர்வாகிகள் அலுவலகங்கள், வீடுகளில் நடத்திய சோதனையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும், அந்த அமைப்பை சேர்ந்த, 11 பேர் கைது செய்யப்பட்டனர்.இதையடுத்து, பி.எப்.ஐ., மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு, மத்திய அரசு ஐந்தாண்டுக்கு தடை விதித்துள்ளது. தமிழகத்தில், பி.எப்.ஐ., அமைப்பை தடை செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை புரசைவாக்கம், முக்காத்தாள் தெருவில் உள்ள, பி.எப்.ஐ., அமைப்பின் தமிழக தலைமை அலுவலகத்திற்கு, மாநகராட்சி மற்றும் போலீசார் இணைந்து நேற்று 'சீல்' வைத்தனர். அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், அத்தெருவில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X