நீதிபதியை மிரட்டிய வழக்கில்: இம்ரான் கானுக்கு கைது வாரண்ட்

Updated : அக் 01, 2022 | Added : அக் 01, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
இஸ்லாமாபாத்: நீதிபதியை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்தது.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் உதவியாளர் ஷாபாஸ் கில், தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமாபாத்தில் கடந்த ஆக. 20-ல் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான்கான்,
நீதிபதி, மிரட்டல், வழக்கு, இம்ரான் ,கைது வாரண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

இஸ்லாமாபாத்: நீதிபதியை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்தது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் உதவியாளர் ஷாபாஸ் கில், தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமாபாத்தில் கடந்த ஆக. 20-ல் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான்கான், காவல்துறை அதிகாரிகள், தேர்தல் ஆணைய அதிகாரிகள், தனது அரசியல் எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யப் போவதாகவும், ஷாபாஸ்கில்லை இரண்டு நாள் காவலில் எடுக்க போலீசாருக்கு அனுமதி வழங்கிய நீதிபதி ஜெபா சவுத்ரி மீதும் நடவடிக்கை எடுப்பேன் என மிரட்டல் தொனியில் பேசினார்.


latest tamil news



இதையடுத்து இம்ரான் கான் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று இம்ரான் கான் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் தமது வழக்கறிஞருடன் நேரில் ஆஜராகி பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார். எனினும் அவரை மர்காலா காவல் நிலைய போலீசார் கைது செய்யுமாறு கோர்ட் வாரண்ட் பிறப்பித்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
02-அக்-202200:18:42 IST Report Abuse
Vena Suna இஷடத்துக்கு பௌன்சர் போட்டு பேட்ஸ்மேன் மண்டையை உடைத்தவனுக்கு இப்போ பல பௌன்சர்ஸ்.
Rate this:
Cancel
canchi ravi - Hyderabad,இந்தியா
01-அக்-202222:47:18 IST Report Abuse
canchi ravi ஆண்டவன் வரம் கொடுத்தும் சரியாக ஆட்சி செய்யத் தெரியாமல் கோட்டை விட்ட நல்ல கிரிக்கெட் வீரன்.
Rate this:
Cancel
kijan - Chennai,இந்தியா
01-அக்-202222:39:18 IST Report Abuse
kijan கிரிக்கெட்ல பாய் நல்ல ஆல்ரவுண்டர் தான் ... ஆனால் அரசியலில் நைட் வாட்ச்மன் ... மோடிஜியின் ராஜதந்திரத்திற்கு முன் இவரது அரசியல் எடுபடவில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X