கோவை:மூதாட்டியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வாலிபருக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை மகிளா கோர்ட் தீர்ப்பளித்தது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி நேதாஜி சாலையில் வசிப்பவர் மைதீன், 20. இவர் கடந்த, 2020 நவ., 10ம் தேதி, 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டியை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். விசாரித்த பொள்ளாச்சி மேற்கு போலீசார் மைதீனை கைது செய்தனர். அவர் மீதான வழக்கு கோவை மகிளா கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.
அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் ஜிஷா ஆஜராகி வாதிட்டார்.வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி, குற்றம் சாட்டப்பட்ட மைதீனுக்கு, இரண்டு பிரிவுகளின் கீழ், நான்காண்டு சிறை தண்டனை விதித்தார்.இந்த வழக்கில் சிறப்பான புலன் விசாரணை மேற்கொண்ட போலீஸ் அதிகாரிகள், சாட்சிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசாருக்கு எஸ்.பி., பத்ரி நாராயணன் பாராட்டு தெரிவித்தார்.