ராமேஸ்வரம்:''ராமேஸ்வரம் அருகே பாம்பன் பழைய ரயில்வே பாலம் உறுதித்தன்மையுடன் இருக்கிறது,'' என, ரயில்வே வாரிய சிவில் பிரிவு செயல் இயக்குனர் விகாஸ் குமார் ஜெயின் தெரிவித்தார்.
விகாஸ் குமார் ஜெயின் ராமேஸ்வரத்தில் ரயில்வே பணிகளை ஆய்வு செய்தார். துாக்கு பாலம் இயங்கும் தன்மை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து புதிய பால கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.
அவர் கூறியதாவது:பழைய பாலம் உறுதித் தன்மையுடன் நல்ல நிலையில் உள்ளது. புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.எப்போது அந்த பணிகள் நிறைவடையும் என்பதை ரயில்வே துறையின் கட்டுமான பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து தெரிவிப்பர்.இவ்வாறு அவர் கூறினார்.