என் இனிய எந்திரா...ரஜினி பானியில் ரோபோவை அழைத்த எலான் மஸ்க்!

Added : அக் 01, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
தானியங்கி மின்சார கார் தயாரிப்பில் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், தற்போது மனித வடிவிலான ரோபோவை அமெரிக்காவில் பொது மக்கள் பார்வைக்கு அறிமுகப்படுத்தினார். கட்டளை ஏற்று அந்த ரோபா மேடைக்கு நடந்து வந்து பார்வையாளர்களை பார்த்து கையசைத்தது.மனித வடிவ ரோபா என்றதும் நினைவுக்கு வருவது எந்திரன் படத்தில் ரஜினியின் கதாபாத்திரமான சிட்டி தான்.
எலான்மஸ்க், ElonMusk, Robot, HumanoidRobot, Endhiran, எந்திரன், ரோபோ

தானியங்கி மின்சார கார் தயாரிப்பில் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், தற்போது மனித வடிவிலான ரோபோவை அமெரிக்காவில் பொது மக்கள் பார்வைக்கு அறிமுகப்படுத்தினார். கட்டளை ஏற்று அந்த ரோபா மேடைக்கு நடந்து வந்து பார்வையாளர்களை பார்த்து கையசைத்தது.

மனித வடிவ ரோபா என்றதும் நினைவுக்கு வருவது எந்திரன் படத்தில் ரஜினியின் கதாபாத்திரமான சிட்டி தான். அச்சு அசலான மனித வடிவ ரோபாவை அதில் காட்சிப்படுத்தியிருப்பார் சங்கர். படம் வெளியான 2010 சமயத்தில் இவை எல்லாம் சாத்தியமா என நினைத்திருப்போம். ஆனால் மெல்ல மெல்ல அவை கண் முன்னே நிஜமாகிக் கொண்டிருக்கின்றன. படத்தில் வருவது போன்ற முழு மனித வடிவிலான ரோபோவை அமெரிக்க பில்லியனர் எலான் மஸ்க் உருவாக்கி வருகிறார். ஆப்டிமஸ் என்ற அந்த ரோபோவை அவர் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது.

எலான் மஸ்க் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் மனிதவடிவ ரோபோக்கள் தயாரிப்பு திட்டத்தை வெளியிட்டிருந்தார். தற்போது மாதிரி ரோபோ தயாராகியுள்ளது. அடுத்த ஆண்டு முதல் அதன் உற்பத்தியை துவங்க திட்டமிட்டுள்ளனர். தற்போது டெஸ்லாவின் கலிபோர்னியா அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் ஆறடி ஆப்டிமஸ் எனும் அந்த ரோபோவை அறிமுகப்படுத்தினார். அது மெல்ல நடந்து வந்து பார்வையாளர்களை பார்த்து கையசைத்தது. மேலும் அது குறித்த வீடியோவில் ஆப்டிமஸ் ரோபோ டெஸ்லா ஆலையில் ஒரு பெட்டியை சுமந்து செல்கிறது, செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறது, உலோகக் கம்பிகளை நகர்த்துவது போன்றவை இடம்பெற்றுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
02-அக்-202215:33:05 IST Report Abuse
Vijay D Ratnam நாடென்ன செய்தது நமக்கு என்பதைவிட நீ என்ன செய்தாய் அதற்கு என்று பார் என சொன்னது என்று கேட்டால் தமிழ்நாட்டில் 99 சதவிகிதம் பேர் அது எம்ஜிஆர் பாட்டு என்பார்கள். ஜான் எஃப் கென்னடி சொன்னார் என்று சொல்லமாட்டான். அது மாதிரிதான் இதுவும். ரஜினிகாந்துக்கெல்லாம் ரோபோ என்றால் என்னவென்றே தெரியாத காலத்தில் எழுத்தாளர் சுஜாதா சொன்னது என் இனிய இயந்திரா. சுஜாதா ரொம்ப ரசனை மிகுந்த மனிதர். 45 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு நாவலில் சிகப்பு நிற கார் டூட் என்ற ஹார்ன் ஒலி எழுப்பியது என்றுதான் பொதுவாக எழுதுவார்கள். ஆனால் சுஜாதா ரத்த நிற டொயோட்டா டூட்டியது என்பார். க்ரேட் மேன்.
Rate this:
Cancel
Arul Narayanan - Hyderabad,இந்தியா
02-அக்-202212:43:17 IST Report Abuse
Arul Narayanan என் இனிய இயந்திரா என்பது ரஜினி பாணி அல்ல. நாற்பது வருடங்களுக்கு முன் சுஜாதா எழுதிய ஒரு தொடர் கதையின் தலைப்பு.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
02-அக்-202208:41:12 IST Report Abuse
NicoleThomson தொழில் சங்கம் வைக்குமா? பக்கத்துக்கு மாநிலத்தில் இருந்து கனிம வளங்களை திருடுமா? பொய் சொல்லுமா ? மதம் பிடித்து அலையம?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X