2030க்குள் பொழுதுபோக்கு துறையின் வளர்ச்சி ரூ.8 லட்சம் கோடி!

Updated : அக் 01, 2022 | Added : அக் 01, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி :ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை வரும் 2030ம் ஆண்டுக்குள், 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மாபெரும் துறையாக உருவெடுக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தயாராக இருப்பதாக, அத்துறையின் செயலர் அபூர்வா சந்திரா தெரிவித்தார்.திரைப்படம், 'டிவி' மற்றும் வானொலி, 'டிஜிட்டல்' பொழுதுபோக்கு, 'அனிமேஷன், கேமிங், விஷுவல்
2030 ,பொழுதுபோக்கு,  வளர்ச்சி, ரூ.8 லட்சம் கோடி

புதுடில்லி :ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை வரும் 2030ம் ஆண்டுக்குள், 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மாபெரும் துறையாக உருவெடுக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தயாராக இருப்பதாக, அத்துறையின் செயலர் அபூர்வா சந்திரா தெரிவித்தார்.திரைப்படம், 'டிவி' மற்றும் வானொலி, 'டிஜிட்டல்' பொழுதுபோக்கு, 'அனிமேஷன், கேமிங், விஷுவல் எபெக்ட்ஸ்' உள்ளிட்ட துறைகள் தொடர்பான நிபுணர்களின் கருத்தரங்கம் மஹாராஷ்டிராவின் மும்பையில் சமீபத்தில் நடந்தது. இந்நிகழ்வை, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை செயலர் அபூர்வா சந்திரா துவக்கி வைத்தார்.அப்போது அவர் பேசியதாவது:திரைப்பட துறையில் அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு துவக்கி உள்ளது.


latest tamil news
ஊக்கத் தொகைஇதற்காக அரசின் பல்வேறு திரைப்பட பிரிவுகள், என்.எப்.டி.சி., எனப்படும் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுஉள்ளது. இதற்கான மையமாக என்.எப்.டி.சி.,யின் மும்பை அலுவலகம் செயல்படும். இதன் வாயிலாக பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் நம் நாட்டு திரைப்படங்களில் முதலீடு செய்ய வரவேற்கப்படுவர். நம் நாட்டில் வெளிநாட்டு திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் படப்பிடிப்பு நடத்துவதை ஊக்குவிக்க, மாநில அரசுகளுடன் இணைந்து திட்டங்கள் வகுக்கப்பட உள்ளன. ஐரோப்பிய நாடான பிரான்சில் சமீபத்தில் நடந்த கான்ஸ் திரைப்பட விழாவில், இந்தியாவில் நடத்தப்படும் வெளிநாட்டு திரைப்பட படப்பிடிப்புகளுக்கு ஊக்கத் தொகை அளிக்கும் திட்டம் குறித்து அறிவித்தோம்.இது, நிறைய வெளிநாட்டு தயாரிப்பு நிறுவனங்களை நம் நாட்டை நோக்கி ஈர்க்கும்.கடந்த 5 - 6 ஆண்டுகளாக திரை அரங்குகளுக்கு மக்கள் வந்து படம் பார்க்கும் பழக்கம் கணிசமாக குறைந்து வருகிறது. இதை மீட்டெடுக்க வேண்டும். வெளிநாட்டு நிறுவனங்கள் நம் நாட்டு திரையரங்குகளில் முதலீடு செய்ய, ஒற்றை சாளர முறை கொண்டு வரப்படும். இதன் வாயிலாக முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, திரையரங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதிரி திரையரங்கங்கள் திறக்கும் திட்டமும் உள்ளது. இந்தப் பணி, மாநில அரசுடன் கைகோர்த்து நிறைவேற்றப்படும்.'ஹவுஸ்புல்'கொரோனா தொற்று பரவலுக்கு பின், மக்கள் திரைப்படங்களை பார்க்கும் பழக்கத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சமீபத்தில் சினிமா டிக்கெட் விலையை 75 ரூபாய் என குறைத்ததும், அனைத்து காட்சிகளும், 'ஹவுஸ்புல்'லாகின. மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய விலை வைத்தால், அவர்கள் திரையரங்கம் வர தயாராக உள்ளனர் என்பதையே இது காட்டுகிறது. தியேட்டரில் படம் பார்க்கும் ஆர்வம், மக்கள் மத்தியில் இன்னும் குறையவில்லை.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், தகவல் தொழில்நுட்ப துறையில் ஏற்பட்ட புரட்சியை போல, ஏ.வி.ஜி.சி., எனப்படும், 'அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ்' துறையில் மாபெரும் புரட்சி நடக்க உள்ளது.இப்போதே பெரும்பாலான, 'ஹாலிவுட்' திரைப்படங்களின் விஷுவல் எபெக்ட்ஸ், கர்நாடகாவின் பெங்களூரு உட்பட பல்வேறு இந்திய நகரங்களில் செய்யப்படுகின்றன. எனவே, இந்த ஏ.வி.ஜி.சி., குறித்து ஆய்வு செய்ய, சிறப்பு குழுவை மத்திய அரசு நியமித்து உள்ளது. இந்த குழு, 15 நாட்களில் தங்கள் பரிந்துரையை தாக்கல் செய்ய உள்ளது. இதன் அடிப்படையில், இத்துறை சார்ந்த திட்டங்கள் நிறைவேற்றப்படும்.தனியார் நிறுவனத்துடன் இணைந்து, ஏ.வி.ஜி.சி., துறை தொடர்பான சிறப்பு மையத்தை திறக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தான், 'மொபைல் டேட்டா'வுக்கான செலவு மிக குறைவாக உள்ளது. இது, ஊடகம் மற்றும் திரைத் துறையினருக்கு சாதகமாக உள்ளது. மொபைல் டேட்டா தேவையில்லாமலேயே திரைப்படங்களை, 'மொபைல் போன்'களில் பார்க்கும் தொழில்நுட்பம் விரைவில் வர உள்ளது.நேரடியாக ஒளிபரப்பு


பிரசார் பாரதியும், ஐ.ஐ.டி., கான்பூரும் இணைந்து தயாரித்துள்ள இந்த தொழில்நுட்பம் வாயிலாக, 200 'டிவி' சேனல்கள், திரைப்படங்களை மொபைல் போனில் நேரடியாக ஒளிபரப்பும் தொழில்நுட்பம் தயாராக உள்ளது.ஊடகம் மற்றும் பொழுது போக்கு துறை வரும் 2030ம் ஆண்டுக்குள், 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மாபெரும் துறையாக உருவெடுக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தயாராக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
03-அக்-202209:02:37 IST Report Abuse
Bhaskaran மதுரையில் ஒரு திரையரங்கம் இன்னும் டிக்கெட் பெண்களுக்கு குறைந்த கட்டணத்தில் அனுமதியளிக்கிறது .உயர்பட்ச்சகட்டணமும் குறைவு .அம்மாதிரி திரையரங்குகளுக்கு வரிச்சலுகை கொடுக்கணும் அரசு திரையரங்குகள் கட்டி குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு பொழுதுபோக்கு வசதி தரலாம் ( அரசு திரையரங்காதில் உதய் அண்ணா படம் மட்டுமே வெளியிடப்படும் ) அரங்க கட்டணத்தை ஆயிரம் ரூபாய் வைத்து இதில் சாதனை என்ன வேண்டியிருக்கு
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
02-அக்-202200:11:22 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் . ஒருத்தனும் இன்னிக்கி இருக்கற உண்மை அசிங்கத்தை பத்தி பேசமாட்டேங்குறாய்ங்க. இப்போதைக்குன்னு சொல்றதுக்கு ஒண்ணுமில்லைன்னு நமக்கு தெரியுது. ஸ்ஸ்ஸ் அப்பா..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X