நடிகர் அன்னு கபூரிடம் ரூ.4.36 லட்சம் மோசடி

Added : அக் 02, 2022 | |
Advertisement
மும்பை:பாலிவுட் நடிகர் அன்னு கபூர் வங்கி கணக்கில் இருந்து, ௪.௩௬ லட்சம் ரூபாய் 'ஆன்லைன்' வாயிலாக மோசடி செய்து எடுக்கப் பட்டது. நடிகர் அன்னு கபூருக்கு, சமீபத்தில் தனியார் வங்கியில் இருந்து பேசுவதாக அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர், வங்கி கணக்கு விபரங்களை புதுப்பிக்க வேண்டும் எனக்கூறி தகவல்களை பெற்றுஉள்ளார். இதையடுத்து, நடிகரின் வங்கி கணக்கில் இருந்து, ௪.௩௬ லட்சம்
நடிகர் அன்னு கபூரிடம் ரூ.4.36 லட்சம் மோசடி

மும்பை:பாலிவுட் நடிகர் அன்னு கபூர் வங்கி கணக்கில் இருந்து, ௪.௩௬ லட்சம் ரூபாய் 'ஆன்லைன்' வாயிலாக மோசடி செய்து எடுக்கப் பட்டது. நடிகர் அன்னு கபூருக்கு, சமீபத்தில் தனியார் வங்கியில் இருந்து பேசுவதாக அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர், வங்கி கணக்கு விபரங்களை புதுப்பிக்க வேண்டும் எனக்கூறி தகவல்களை பெற்றுஉள்ளார். இதையடுத்து, நடிகரின் வங்கி கணக்கில் இருந்து, ௪.௩௬ லட்சம் ரூபாய் இரு வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டன.



இதை, வங்கி மேலாளர், அன்னு கபூரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். உடனே, அவர், போலீசாரிடம் புகார் தெரிவித்தார். மேலும், பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கிகளையும் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார்.



இதையடுத்து, இரண்டு கணக்குகளும் முடக்கப்பட்டு, ௩.௦௮ லட்சம் ரூபாய் திரும்பப் பெறப்பட்டது. இது குறித்து வழக்கு பதிந்த போலீசார், 'ஆன்லைன் மோசடியாளரை பிடிக்க விசாரணை நடத்தப்படுகிறது' என்றனர். அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் நடித்த ஹம், அனில் கபூர் நடித்த தேஜாப் உள்ளிட்ட பல ஹிந்திபடங்களில் அன்னு கபூர் நடித்துஉள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X