நவராத்திரி குறித்து சர்ச்சை கருத்து: பல்கலை. பேராசிரியர் டிஸ்மிஸ்

Updated : அக் 02, 2022 | Added : அக் 02, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
வாரணாசி: உ.பி.யில் நவராத்திரி பண்டிகை குறித்து சமூக வலைதளத்தில் சர்ச்சை கருத்து தெரிவித்ததாக பல்கலை. கவுர பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.உ.பி.மாநிலம் வாரணாசியில், மகாத்மா காந்தி,காஸி வித்யாபீடம் என்ற பல்கலை.யில் அரசியல் அறிவியல் துறை கவுரவ பேராசிரியராக பணியாற்றி வந்தவர் மிதிலேஷ் குமார் கவுதம், கடந்த செப்.29-ம் தேதி சமூக வலைதளத்தில் சர்ச்சை கருத்தை
Professor expelled , Varanasi university , social media post ,Navratriநவராத்திரி ,சர்ச்சை,பல்கலை, பேராசிரியர் ,

வாரணாசி: உ.பி.யில் நவராத்திரி பண்டிகை குறித்து சமூக வலைதளத்தில் சர்ச்சை கருத்து தெரிவித்ததாக பல்கலை. கவுர பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.



உ.பி.மாநிலம் வாரணாசியில், மகாத்மா காந்தி,காஸி வித்யாபீடம் என்ற பல்கலை.யில் அரசியல் அறிவியல் துறை கவுரவ பேராசிரியராக பணியாற்றி வந்தவர் மிதிலேஷ் குமார் கவுதம், கடந்த செப்.29-ம் தேதி சமூக வலைதளத்தில் சர்ச்சை கருத்தை பதிவேற்றினார். அதில் நவராத்திரி விழாவின் 9 நாட்களில் பெண்கள் விரதம் இருப்பதற்கு பதிலாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் ஹிந்து சட்டத்தையும் படிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.


latest tamil news




பேராசிரியரின் இந்த கருத்து ஹிந்துக்களையும் ஹிந்து பண்டிகையை அவமதிப்பதாக புகார் எழுந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு தரப்பினர் பேராசிரியரின் சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக பல்கலை. நிர்வாகம் அவரை பணிநீக்கம் செய்ததுடன், அவர் எக்காரணம் கொண்டும் பல்கலை. வளாகத்திற்குள் நுழையக்கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
02-அக்-202216:50:38 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan அங்கு நடப்பது மக்களின் ஆட்சி. வாய்க் கொழும்பு ராஜாக்களை சுதந்திரமாக உலாவ விடுவது இங்கு நடக்கும் குடும்ப ஆட்சி.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
02-அக்-202208:46:17 IST Report Abuse
Bhaskaran வரவர இம்மாதிரி அறிவுஜீவி கொசுகளின் தொல்லை ஜாஸ்தியாகி விட்டது
Rate this:
Cancel
02-அக்-202208:33:40 IST Report Abuse
Gopalakrishnan S அது உத்தரப் பிரதேசம் ஆனதால் பணிநீக்கம் செய்யப்பட்டார். தமிழ் நாடாயிருந்தால் அவர் எம்.பி. பதவி பெற்றிருப்பார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X