கோவை;இன்று ஞாயிறு!குடும்பத்தோடு இந்நாளை செலவிட்டு, வீட்டுக்கு தேவையான பொருட்களை 'பட்ஜெட்' விலையில் வாங்க, 'தினமலர்' நாளிதழ் சார்பில், 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' நுகர்வோர் கண்காட்சி நடக்கிறது.கண்காட்சி இங்கல்ல; பொள்ளாச்சியில். பொள்ளாச்சி கோவை ரோட்டிலுள்ள, ஸ்ரீ கந்த மஹாலில், கடந்த இரண்டு நாட்களாக ஏகோபித்த வரவேற்புடன், தடபுடலாக நடைபெற்று வரும் இக்கண்காட்சி, இன்று நிறைவடைகிறது.இந்த கண்காட்சியில், வெளிநாட்டு தயாரிப்பு நிறுவனங்கள், இந்தியாவின் பிரபல நிறுவனங்கள் ஸ்டால்கள் அமைத்துள்ளன. வீட்டுக்குத் தேவையான பொருட்களை, சலுகை விலையில் வாங்கி ஜமாய்க்கலாம்.கண்காட்சியில், 70க்கும் மேற்பட்ட ஸ்டால்களுடன், எல்லா வயதினரையும் குஷிப்படுத்தும், மேஜிக் ஷோ, ஜக்லர்ஸ் ஷோ, ஒட்டக சவாரி, வாட்டர் போட், பலுான் கேம்ஸ், என, ஏராளமான விளையாட்டுகள், பல விதமான பொழுது போக்கு அம்சங்கள், உங்கள் குழந்தைகளுக்காக வெயிட்டிங்!இது மட்டுமா...பெண்களை கவர்ந்திழுக்கும் சமையலறை ஐட்டங்கள், வீட்டு பர்னிச்சர்... இப்படி எல்லாமே ஓரிடத்தில் கிடைக்கிறது.கோவையில் நடந்த 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' மிஸ் பண்ணியவர்களுக்கு, இது மற்றொரு வாய்ப்பு. கடைசி நாளில் வந்து, 'அடடா...முன்னமே வந்திருக்கலாமே' என ஏங்கியவர்களும், பொள்ளாச்சியில் இன்று கிடைக்கும் இந்த வாய்ப்பை, பயன்படுத்திக் கொள்ளலாம்.முக்கியமாக, குழந்தைகளுக்கும் லீவு விட்டாச்சு. இந்த விடுமுறை நாளில், அவர்களை குஷிப்படுத்த, 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சியை தவிர, வேறு என்ன 'பெட்டர் சாய்ஸ்' இருக்க முடியும்?ஆகவே, காலை 10:00 மணிக்கே கிளம்பி விடுங்கள். ராத்திரி 8:00 மணி வரை கொண்டாடி தீர்த்து, ரிலாக்சாக கோவை திரும்புங்கள்!
பல்வேறு மாநிலங்களின் சைவ, அசைவ உணவு ஐட்டங்கள், அங்குள்ள புட் கோர்ட்டில் உங்கள் நாவை சுண்டியிழுக்கும். வாரம் முழுவதும் உங்களுக்காக சமைத்து 'ஓடாப்போன' உங்கள் ஒய்புக்கு,ஞாயிறு விடுமுறையான இன்று, ரெஸ்ட் கொடுத்த மாதிரி இருக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொடுத்து, அவர்களை சந்தோஷப்படுத்திய மாதிரியும் இருக்கும்.