கோவை:மேற்கு மண்டல மாவட்டங்களில், அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய அறிக்கை:மேற்கு மண்டலத்தில், அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை இருக்கும். கோவை மாவட்டத்தில், நாளை (இன்று), 34 மி.மீ., வரை மழைப்பொழிவு எதிர்பார்க்கலாம். அதிகபட்ச வெப்பநிலை, 32 டிகிரி செல்சியஸ் வரை செல்லும்.காற்றின் வேகம், 8 கி.மீ., வரை இருக்கும். மழை எதிர்பார்க்கப்படுவதால், பருத்தி, மஞ்சள், மக்காச்சோளம், தக்காளி, நிலக்கடலை ஆகிய பயிர்களுக்கு தக்க வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.