அமைச்சர்கள் வில்லங்க பேச்சு: முதல்வர் 'அப்செட்!'

Updated : அக் 02, 2022 | Added : அக் 02, 2022 | கருத்துகள் (31) | |
Advertisement
தி.மு.க., அமைச்சர்கள் ஆளாளுக்கு வில்லங்கமாக பேசுவதால், முதல்வர் ஸ்டாலின் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். வரும் 9ல் நடக்கும் பொதுக்குழுவில், தலைவர் தேர்ந்தெடுப்பு உட்பட முக்கிய அலுவல்கள் நடைபெற இருந்தாலும், அமைச்சர்களின் சர்ச்சை பேச்சுக்கு 'கிடுக்கி' போடும் வகையில், கடுமையாக எச்சரிக்கும் விதமாக அறிக்கை வெளியிட, முதல்வர் ஆயத்தமாகி வருகிறார்.கடந்த 2021 சட்டசபை
அமைச்சர்கள், வில்லங்கம் , பேச்சு, முதல்வர் அப்செட்

தி.மு.க., அமைச்சர்கள் ஆளாளுக்கு வில்லங்கமாக பேசுவதால், முதல்வர் ஸ்டாலின் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். வரும் 9ல் நடக்கும் பொதுக்குழுவில், தலைவர் தேர்ந்தெடுப்பு உட்பட முக்கிய அலுவல்கள் நடைபெற இருந்தாலும், அமைச்சர்களின் சர்ச்சை பேச்சுக்கு 'கிடுக்கி' போடும் வகையில், கடுமையாக எச்சரிக்கும் விதமாக அறிக்கை வெளியிட, முதல்வர் ஆயத்தமாகி வருகிறார்.கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல் முறையாக ஸ்டாலின் முதல்வரானார். எனவே, அரசின் மீது மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால், தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்ற முடியாமல், நிதி நிலை காரணமாக அரசு தவித்து வருகிறது.


அடுத்தடுத்து சர்ச்சை'படிப்படியாக வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்' என முதல்வர் சமாளித்து வரும் நிலையில், அமைச்சர்களின் செயல்பாடு, மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது மட்டுமல்ல; முதல்வரையும் சங்கடத்திற்கு ஆளாக்கி உள்ளது. கடந்த மே மாதம், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு பதில் கொடுப்பதாக நினைத்து, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தியாகராஜன் ஆகியோர், அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கினர்.அவர்களை தொடர்ந்து, அமைச்சர் ராஜகண்ணப்பன், வட்டார வளர்ச்சி அலுவலரை ஜாதி பெயரை சொல்லி திட்டி, வம்பில் சிக்கினார். கடும் கோபம் அடைந்த முதல்வர், அவரிடம் இருந்த முக்கிய இலாகாவான போக்குவரத்து துறையை பறித்தார்.ஆனாலும், அமைச்சர்களின் செயல்பாட்டில் மாற்றம் வந்தபாடில்லை. மூத்த அமைச்சரான வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன், மனு கொடுக்க வந்த பெண்ணின் தலையில், மனுவால் அடித்த காட்சி வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. செல்லமாக தட்டியதாகக் கூறி அமைச்சர் சமாளித்தாலும், முதல்வருக்கு வருத்தம் தீரவில்லை.தற்போது, தன்னை சந்திக்க வந்த, தலித் சமுதாயத்தைச் சேர்ந்த சொந்த கட்சி எம்.பி., தனுஷ்குமார் மற்றும் குறவர் சமூகப் பிரதிநிதியை நிற்க வைத்து பேசி அனுப்பியதும், அமைச்சர் ராமச்சந்திரனுக்கு எதிராக அமைந்தது. இதற்கெல்லாம் சிகரமாக, முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க., - எம்.பி.,யும், கட்சியின் மூத்த நிர்வாகியுமான ஆ.ராஜா, ஹிந்துக்களை இழிவாகப் பேசியது, கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அ.தி.மு.க., - பா.ஜ., உட்பட பல்வேறு கட்சிகள், ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்தன.


latest tamil news

கடும் நெருக்கடிஇது, ஹிந்துக்கள் மத்தியில், தி.மு.க.,வுக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தியது. இதனால் கடுப்பான முதல்வர், எந்த பதிலும் கூறாமல் மவுனம் காத்து வருகிறார்.இந்த பிரச்னை முடிவதற்குள், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பொதுக்கூட்டம் ஒன்றில், அரசு பஸ்சில் பெண்கள் 'ஓசி' பயணம் செய்வதாக கேலி பேசி, புதிய சர்ச்சையை
ஏற்படுத்தினார். பெண்களுக்கான இலவச பஸ் பயணத் திட்டத்தை, செல்லுமிடம் எல்லாம் அரசின் சாதனையாக முதல்வர் பேசி வருகிறார். இந்த நிலையில், மூத்த அமைச்சரான பொன்முடியை, 'ஓசி பயணம் செய்யும் பெண்கள்' என பேசி, பெண்களிடத்தில் எதிர்ப்பை சம்பாதித்துள்ளார்.அதன் வெளிப்பாடாக, மூதாட்டி ஒருவர், 'நான் ஓசி பயணம் செல்ல விரும்பவில்லை; டிக்கெட் கொடு' என கண்டக்டரிடம் சண்டை போடும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி, தி.மு.க.,வுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

இவர்களுக்கு மத்தியில், கட்சியின் பொதுச்செயலரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, 'கல்லுாரியில் படிக்கும் பெண்களுக்கு, மாதம், 1,000 ரூபாய் வழங்குகிறோம். 'உடனே, இல்லத்தரசிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கவில்லையா என கேட்கின்றனர். சில்லரை மாற்றிக் கொண்டிருக்கிறோம்; விரைவில் வழங்குவோம்' என நக்கலடித்தார்.இந்த வீடியோக்களை பதிவிட்டு, சமூக வலைதளங்களில் தி.மு.க.,வை மக்கள் கடுமையாக விமர்சிக்கத் துவங்கி உள்ளனர். பதில் அளிக்க முடியாமல், தி.மு.க.,வினர் தடுமாறி வருகின்றனர்.அமைச்சர்களின் பேச்சால், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு வருகிறது என்ற விபரத்தை, முதல்வரின் கவனத்திற்கு உளவுத் துறை எடுத்துச்சென்றுள்ளது. இதை அறிந்த முதல்வர் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.


ஆட்சிக்கு அவப்பெயர்அதை, வரும் ௯ம் கூடும் பொதுக்குழுவில் வெளிப்படுத்த முடிவு செய்துள்ளார். சர்ச்சை அமைச்சர்களுக்கும், கட்சியினருக்கும் 'கிடுக்கி' போடும் விதமாக, பொதுக்குழுவில் கண்டன அறிக்கை வெளியிட திட்டமிட்டுள்ளார்.'அரசை சிறப்பாக நடத்தி, மக்களிடம் நல்ல பெயர் ஏற்படுத்த, முதல்வர் பல வகைகளில் முயற்சித்து வருகிறார். அதை நிர்மூலமாக்கும் வகையில், மூத்த அமைச்சர்கள் பேசுகின்றனர். 'அவர்களுக்கு கடிவாளம் போடாவிட்டால், கட்சிக்கும் ஆட்சிக்கும் அவப்பெயர் அதிகமாகி விடும் என, முதல்வர் கருதுகிறார். அதற்கு பொதுக்குழு சரியான வாய்ப்பாக அமைந்துள்ளது' என, அறிவாலய வட்டாரங்கள் கூறின.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இலங்கை
04-அக்-202202:14:53 IST Report Abuse
jagan ரவடிக்கூட்டம் வேற எப்பிடி பேச முடியும். சொரியார் சிஷ்யன் என்று வேறு சொல்லிக்கொள்ளும் தரை டிக்கெட்டுகள் தான் தீய மு க
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
02-அக்-202219:03:43 IST Report Abuse
வாய்மையே வெல்லும் எஸ்ஸுக்கு கொழுப்பெடுத்தால் இப்படி தான் மந்திரிமார்களுக்கு பேச்சு வரும்..
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
02-அக்-202216:55:24 IST Report Abuse
சீனி ஓசி குவாட்டருக்கு ஊழல்வாதிகளையும், ரெளடிகளையும், வில்லன்களையும், கொள்ளைக்காரர்களையும் ஆட்சி செய்ய மக்கள் தேர்ந்தெடுத்தா கடைசியில் இது தான் கிடைக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X