புதிய அட்டர்னி ஜெனரல் நியமனத்தால் தமிழர்களுக்கு பெருமை

Added : அக் 02, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
மத்திய அரசின் புதிய அட்டர்னி ஜெனரலாக தமிழரான ஆர். வெங்கடரமணி, 72, நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியை ஏற்கும் மூன்றாவது தமிழர் இவர்.முதலாவது நபர்- கே.பராசரன். இந்திரா மற்றும் ராஜிவ் பிரதமராக இருந்த போது இவர் அட்டர்னி ஜெனரலாக பணியாற்றினார்.மறைந்த சந்திரசேகர் மற்றும் நரசிம்ம ராவ் பிரதமர்களாக இருந்த போது ஜி.ராமசாமி அட்டர்னி ஜெனரலாக இருந்தார்.சீனியர் வழக்கறிஞர் முகுல்
அட்டர்னி ஜெனரல், நியமனம், தமிழர்கள் , பெருமை

மத்திய அரசின் புதிய அட்டர்னி ஜெனரலாக தமிழரான ஆர். வெங்கடரமணி, 72, நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியை ஏற்கும் மூன்றாவது தமிழர் இவர்.முதலாவது நபர்- கே.பராசரன். இந்திரா மற்றும் ராஜிவ் பிரதமராக இருந்த போது இவர் அட்டர்னி ஜெனரலாக பணியாற்றினார்.



மறைந்த சந்திரசேகர் மற்றும் நரசிம்ம ராவ் பிரதமர்களாக இருந்த போது ஜி.ராமசாமி அட்டர்னி ஜெனரலாக இருந்தார்.சீனியர் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி தனக்கு இந்த பதவி வேண்டாம் என மறுத்த பின் பல பெயர்கள் அடிபட்டன. ஆனால் யாருமே வெங்கடரமணி இந்தப் பதவியில்

நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கவில்லை. தற்போது சொலிசிட்டர் ஜெனரலாக உள்ள துஷார் மேத்தா அட்டர்னி ஜெனரலாக வருவார் என பேசப்பட்டது.



ஆனால் பிரதமர் வெங்கடரமணியை தேர்ந்தெடுத்துள்ளார். இவர் 34 வருடங்களாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை நடத்தி வருபவர். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர். கர்நாடக இசைப்பிரியர். அதிலும் கானக்குயில் எம்.எஸ். சுப்புலட்சுமி பாடல்கள் என்றால் இவருக்கு உயிர். இவருடைய மொபைல் போனில், எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய 'குறையொன்றும் இல்லை' என்ற பாடல் தான்'காலர் டியூன்' ஆக இருக்கிறது.



latest tamil news


பல வட மாநில சீனியர் வழக்கறிஞர்கள் இருந்தும், இவரை பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தேர்ந்தெடுக்க காரணம் எந்த ஒரு பிரச்னையோ, விளம்பரமோ இல்லாமல் அமைதியாக தன் வேலையைப் பார்த்து வருபவர் வெங்கடரமணி. தவிர 'டிவி' விவாதங்களில் இவர் பங்கேற்பதே இல்லை.



மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கவும் பார்லிமென்டில் பேசவும் அட்டர்னி ஜெனரலுக்கு உரிமை உண்டு. இப்படி பொறுப்புள்ள பதவியில் தன்னை நியமித்ததற்கு பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் சட்ட அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார் வெங்கடரமணி. இவருடைய நியமனம் நீதிபதிகள், வக்கீல்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
02-அக்-202213:59:33 IST Report Abuse
duruvasar கருணாநிதி கும்பல் அப்படிதான் பேசும் குமாரு. நீ வருத்தப்பட்டு ஒன்னும் ஆகப்போவதில்லை .
Rate this:
Cancel
தமிழ்நாட்டுபற்றாளன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா
02-அக்-202212:37:40 IST Report Abuse
தமிழ்நாட்டுபற்றாளன் ......
Rate this:
Cancel
பைரவர் சம்பத் குமார் 1).தங்கள் பணி மென்மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா..2). தமிழ்நாடு முழுவதும் பேல்பூரி பிரியாணி கடை நடத்தும் நமது தமிழ் உறவுகளுக்கு என்பது வருத்தமாக இருக்கிறது.3). ஞாயிற்றுக்கிழமையில் கோவிலில் ஒயின் குடிக்கும் கலாசாரம் உள்ள மற்றொரு தமிழனுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது உண்மையில் மனதுக்கு பயங்கர வருத்தமாக உள்ளது. நன்றி வணக்கம் ஐயா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X