இது உங்கள் இடம்: மண் குதிரையை நம்பிய கதையாகி விடும்!

Updated : அக் 02, 2022 | Added : அக் 02, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்பி.கே.பிரகாஷ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முன்னாள் துணை பிரதமரும், இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் முன்னாள் தலைவருமான மறைந்த தேவிலாலின், 109வது பிறந்த நாள் விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஹரியானாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பீஹார் முதல்வர்
நிதிஷ்குமார், பிரதமர் கனவு, மம்தா பானர்ஜி, எதிர்கட்சிகள்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphoneஉலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்பி.கே.பிரகாஷ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முன்னாள் துணை பிரதமரும், இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் முன்னாள் தலைவருமான மறைந்த தேவிலாலின், 109வது பிறந்த நாள் விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஹரியானாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், 'நாம் அனைவரும் ஒன்றாக இருப்போம்; அப்போது தான் வலிமையாக இருப்போம்' என்று கூறியதோடு, பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும் என்று வலியுறுத்தினார்.latest tamil news


வழக்கமாக ஒவ்வொரு லோக்சபா தேர்தலுக்கு முன்னரும், மூன்றாவது அணி கோஷம் வலுப்பெறுவது வழக்கமானது. தேர்தல் முடிந்தவுடன், அந்த கோஷம் இருந்த இடம் தெரியாமல் போய் விடும். தற்போது, தேர்தல் நடப்பதற்கு இன்னும், ௧௮ மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க, புதிய அவதாரம் எடுத்துள்ளார்


latest tamil newsநிதிஷ் குமார். கடந்த, 2014 லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் இவர். பின், பீஹார் முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக, மோடியிடமே சரண் அடைந்தார் என்பதை மக்கள் நன்கறிவர். இதற்கு முன், இதேபோன்று எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முற்பட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் போன்றோர் தற்போது அமைதியாக உள்ளனர்.

வரலாற்று நிகழ்வுகளை புரட்டிப் பார்த்தால், 1977ல் தான், எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் ஒன்றிணைந்து, தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தன. அப்படி வெற்றி பெற்றதற்கு மற்றொரு முக்கிய காரணம், முன்னாள் பிரதமர் இந்திராஅமல்படுத்திய நெருக்கடி நிலை பிரகடனம். இதன்பின், 1989ல் வி.பி.சிங் தலைமையில் உருவான தேசிய முன்னணி மற்றும் 1996ல் உருவான ஐக்கிய முன்னணி போன்றவை, எதிர்க்கட்சிகள் அதிக அளவில் இடம் பெற்ற அணியாக இருந்தாலும், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் ஆதரவுடனே ஆட்சி அமைக்க நேரிட்டது;

அந்த ஆட்சிகளும் குறுகிய காலத்திலேயே கவிழ்ந்தன. இந்த விபரத்தை எல்லாம் நிதிஷ் குமார் நன்கு அறிந்தவர் என்றாலும், யானை பலத்துடன் உள்ள பா.ஜ.,வை, பிரதமர் மோடியை, 2024 தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று கனவு காண்கிறார். கட்சித் தலைவர் தேர்தல் உட்பட, பல பிரச்னைகளில் தவித்து வரும் காங்கிரஸ், அதிலிருந்து மீள்வதே பெரிய பிரச்னையாக உள்ள நிலையில், அக்கட்சியை தங்களின் எதிர்க்கட்சி கூட்டணி வளையத்திற்குள், நிதிஷ் குமாரால் கொண்டு வர முடியுமா என்பது சந்தேகமே!

மேலும், பீஹார் மாநிலத்திலேயே ஐக்கிய ஜனதா தளம் கட்சியை தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற வைக்க முடியாத நிதிஷ் குமாரால், எப்படி தேசிய அளவில் எதிர்க்கட்சி கூட்டணிக்கு பெரிய அளவில் வெற்றி தேடி தர முடியும்? தற்போதைய நிலையில், நிதிஷ்குமாரை நம்பி ஒன்றிணைந்து, மத்தியில் ஆட்சியை பிடிக்க முடியும் என்று எதிர்க்கட்சிகள் நம்பினால், அது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாகி விடும். எதிர்க்கட்சிகள், மத்தியில் ஆட்சி என்ற பகல் கனவை ஓரங்கட்டுவதே சரியானது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
03-அக்-202200:42:33 IST Report Abuse
M  Ramachandran நிதீஸுக்கு அரசியலில் கடைய சி காலம்.
Rate this:
Cancel
Ayokkiya Ariyan - chennai,இந்தியா
02-அக்-202217:26:36 IST Report Abuse
Ayokkiya Ariyan பாஜக வுடன் கூட்டணி வைக்காத கட்சிகள் என்றுபார்த்தால் இந்தியாவில் மிக சில கட்சிகளே, அப்படி, கூட இருந்த கட்சிகளையே தன்னிடம் இருக்கும் பண பலத்தால் கபளீகரம் செய்தது பாஜக என்பது உலகறியும், தான் பெரும்பான்மை பலத்தோடு இருக்கிறோம் என்ற மமதையில் பாஜக இருக்கிறது, ஒருவேளை மற்ற கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைத்தால் பாஜகவை கவிழ்த்து சமாதி கட்ட தயாராக இருக்கிறது என்பதே உண்மை, பாஜகவை பொறுத்தவரையில் அவர்களுக்கு எதிரி நீங்கள் நினைப்பதுபோல் அவர்கள் எதிரிக்கட்சிகளான மம்தாவோ, சந்திரசேகர ராவ், அல்லது திமுக இல்லை அவர்களுக்கு எதிரி அவர்கள் கட்சிக்காரர்களும் அவர்களுடன் கூட்டணியில் இருக்கிற, இருந்த கட்சிகளுமே, நிதிஸ் குமார் விலகியதை குறை கூறுபவர்கள், அவரது பதவியையே பறிக்க திட்டம் போட்டது பற்றியோ, பாண்டிச்சேரியில் ரெங்கசாமி பதவியை பறிக்க நினைப்பது போன்று பல்வேறு துரோக செயல்களுக்கு சொந்தக்காரர்கள் பாஜக காரர்கள், பாஜகவோடு கூட்டணி சேர்ந்தால் சில நாட்களில் கட்சி காணாமல் போய்விடும் என்பதே அனைவரின் கருத்து, ஆகவே என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்
Rate this:
Cancel
02-அக்-202217:06:40 IST Report Abuse
பேசும் தமிழன் அடுத்த சந்திரபாபு நாயுடு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X