மருத்துவ மாணவர்களுக்கு சான்றிதழ் திருப்பி தர உத்தரவு

Updated : அக் 02, 2022 | Added : அக் 02, 2022 | |
Advertisement
சென்னை : அரசு மருத்துவமனைகளில், இரண்டு ஆண்டுகள் பணியாற்ற வாய்ப்பு அளிக்காத முதுநிலை மாணவர்களுக்கு, அசல் சான்றிதழ்களை திருப்பி வழங்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவை மருத்துவக் கல்லுாரியில், முதுநிலை மருத்துவப் படிப்பு முடித்த மாணவர்கள், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருப்பதாவது:முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரும்போது,
மருத்துவ மாணவர்கள், மருத்தவ சான்றிதழ், ஐகோர்ட், அரசு மருத்துவமனை,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை : அரசு மருத்துவமனைகளில், இரண்டு ஆண்டுகள் பணியாற்ற வாய்ப்பு அளிக்காத முதுநிலை மாணவர்களுக்கு, அசல் சான்றிதழ்களை திருப்பி வழங்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவை மருத்துவக் கல்லுாரியில், முதுநிலை மருத்துவப் படிப்பு முடித்த மாணவர்கள், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருப்பதாவது:



முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரும்போது, படிப்பை முடித்த உடன் இரண்டு ஆண்டுகள், அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டது. அதற்கான உத்தரவாதத்தை வழங்கினோம்.கடந்த, 2020ல் நாங்கள் படிப்பை முடித்து விட்டோம். நிபந்தனைப்படி இரண்டு ஆண்டுகள் பணிபுரிய நாங்கள் விரும்பியும், எங்கள் சேவையை பயன்படுத்தவில்லை.உத்தரவாதம் அளித்த இரண்டு ஆண்டு காலம் முடிந்த பின், நாங்கள் வேறு எந்த பணிக்கும் போகலாம்; மேற்படிப்பு படிக்கலாம்.எனவே, முதுநிலை படிப்பில் சேரும்போது நாங்கள் அளித்த அசல் சான்றிதழ்களை திருப்பி தரும்படி கோரினோம்; மறுக்கின்றனர்; இரண்டு ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என கூறுகின்றனர்.



latest tamil news


எனவே, சான்றிதழ்களை திருப்பித் தர, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டுள்ளது.மனுக்களை விசாரித்த, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:இதே பிரச்னை தொடர்பான வழக்குகளில், 2020ல், தலைமை நீதிபதி அடங்கிய முதல் பெஞ்ச் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனை, படிப்பு முடித்த இரண்டு ஆண்டுகளில் முடிந்து விடுகிறது.மனுதாரர்கள், 2020 மே மாதம் முதுநிலை படிப்பை முடித்து விட்டனர்.



அதன்பின், இரண்டு ஆண்டுகள் பணியாற்ற, மனுதாரர்களுக்கு கடிதம் அனுப்பப்படவில்லை. படிப்பு முடிந்து, இரண்டு ஆண்டுகள் உத்தரவாதமும் முடிந்து விட்டதால், மனுதாரர்கள் சான்றிதழ்கள் பெறலாம்; அவர்களுக்கு உரிமை உள்ளது.எனவே, மனுதாரர்கள் அளித்த கோரிக்கையை பரிசீலித்து, படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் உத்தரவாதமும் முடிந்திருந்தால், உடனடியாக சான்றிதழ்கள் வழங்க வேண்டும்.



இரண்டு ஆண்டுகளை பூர்த்தி செய்யாதவர்கள் இருந்தால், மீதி நாட்கள் பணிபுரிய அனுமதிக்கலாம். இரண்டு ஆண்டுகள் பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டு, பணியில் சேராமல் இருந்திருந்தால், அவர்களுக்கு சான்றிதழ் திருப்பி வழங்க வேண்டும் என்ற உத்தரவு பொருந்தாது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X