கவர்னருக்கு நள்ளிரவில் வந்த அழைப்பு

Updated : அக் 02, 2022 | Added : அக் 02, 2022 | கருத்துகள் (51) | |
Advertisement
சென்னை: கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில், பா.ஜ., தொண்டர்கள் அதிக அளவில் தாக்கப்பட்டு வருகின்றனர். ஒரு சிலர் கொல்லப்பட்டும் உள்ளனர். இப்போது இந்த வரிசையில் தமிழகமும் சேர்ந்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கவலையை உண்டாக்கிஉள்ளது. தி.மு.க., அரசு பதவிக்கு வந்த பின் தமிழக பா.ஜ., தலைவர்களின் மீது தாக்குதல், அவர்களுடைய வீடு மற்றும் வியாபார இடங்களில் குண்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில், பா.ஜ., தொண்டர்கள் அதிக அளவில் தாக்கப்பட்டு வருகின்றனர். ஒரு சிலர் கொல்லப்பட்டும் உள்ளனர். இப்போது இந்த வரிசையில் தமிழகமும் சேர்ந்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கவலையை உண்டாக்கிஉள்ளது.



latest tamil news



தி.மு.க., அரசு பதவிக்கு வந்த பின் தமிழக பா.ஜ., தலைவர்களின் மீது தாக்குதல், அவர்களுடைய வீடு மற்றும் வியாபார இடங்களில் குண்டு வீச்சு என பல வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.சமீபத்தில் வெளி மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நள்ளிரவு டில்லி திரும்பினார்.

அப்போது, தமிழக பா.ஜ., மற்றும் ஹிந்துத்துவ அமைப்பு தலைவர்களின் வீடுகளில் தாக்குதல் நடைபெற்ற விபரம் அவருக்கு சொல்லப்பட்டது. உடனேயே நள்ளிரவில் தமிழக கவர்னர் ரவிக்கு போன் செய்தாராம் அமித் ஷா. தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக கவலை தெரிவித்ததோடு, 'ஏன் இப்படி நடக்கிறது; தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லையா' என, உள்துறை அமைச்சர் கவர்னரிடம் கேட்டாராம்.


latest tamil news



இதையடுத்து கவர்னர் ரவி திடீரென டில்லி பயணம் மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது.தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமி சமீபத்தில் உள்துறை அமைச்சரை சந்தித்து தி.மு.க., அரசு மீது புகார் பட்டியல் கொடுத்ததோடு, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மோசமாகிவிட்டது என தெரிவித்திருக்கிறார்.

இதையும் பா.ஜ., தலைவர்கள் தாக்கப்படுவதையும் வைத்து பார்க்கும் போது, தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் சட்டம் - ஒழுங்கு மோசமாகிவிட்டது என கருதுகிறாராம் அமித் ஷா.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Ravi - Coimbatore ,இந்தியா
03-அக்-202207:08:40 IST Report Abuse
N Ravi எல்லோரும் மனிதர்களாக மாறினால் அனைத்தும் நல்ல விதமாகவே நடக்கும். தலைக்கனம் பொறாமை பொறுப்பின் மை வஞ்சகம் சூழ்ச்சி இதை தவிர்க்க வேண்டும்
Rate this:
Cancel
N Ravi - Coimbatore ,இந்தியா
03-அக்-202207:04:23 IST Report Abuse
N Ravi நீங்கள் அனைவரும் மனிதர்களாக மாறினால் அனைத்தும் நல்ல விதமாகவே நடக்கும்
Rate this:
Cancel
Venkataraman - New Delhi,இந்தியா
02-அக்-202218:10:28 IST Report Abuse
Venkataraman தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் உள்ளது. அரிவாள் கலாச்சாரம் ஓங்கியிருங்கிறது. கொலை கொள்ளை கற்பழிப்பு நிகழ்வுகள், போதை பொருட்களின் நடமாட்டம் மற்றும் ரவுடிகளின் ஆதிக்கம் பெருமளவில் பரவி வருகிறது. இது தவிர மோசடி வேலைகளும் ஊழல் குற்றங்களும், நாத்திகமும் இந்து எதிர்ப்பு நடவடிக்கைகளும் பெருகி விட்டது. எப்போது திமுக ஆட்சிக்கு வந்தாலும் இவை அனைத்தும் கூடவே சேர்ந்து தமிழ்நாட்டை நாசமாக்கி விடுகிறது. இதற்கு மத்திய அரசுதான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X