வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, சீனா, ஜெர்மனி மற்றும் இந்தியா உட்பட 20 நாடுகள் கொண்ட அமைப்பு 'ஜி 20' என அழைக்கப்படுகிறது.
![]()
|
இந்த அமைப்பு, உலக நாடுகள் சந்திக்கும் பொருளாதார பிரச்னைகள் உட்பட பல விஷயங்களை அலசி ஆராய்ந்து முடிவெடுக்கிறது. இது நடத்தும் மாநாடு களில், இந்த ஜி 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பர்.வரும், 2023ம் செப்டம்பரில் இந்த ஜி- 20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட ஜி 20 நாடுகளின் தலைவர்கள், டில்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பர். இதற்கான ஏற்பாடுகள் இப்போதே துவங்கிவிட்டன.
ஜி- 20 அமைப்பிற்கு பல துணைக் குழுக்கள் உண்டு. இந்த குழுக்கள் எங்கு சந்திக்க வேண்டும் என்பதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவு செய்யும். இந்தியாவில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் பல சுற்றுலாத் தலங்களில் இந்த துணைக் குழுக்களின் கூட்டம் நடத்த வேண்டும் என பிரதமர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் சொன்னாராம்.தமிழகத்தில் நீலகிரி, தஞ்சாவூர், மதுரை ஆகிய இடங்களை பிரதமர் தேர்தெடுத்துள்ளாராம்.
![]()
|
இந்த மூன்று இடங்களில் ஜி 20 துணைக் குழுக்களின் கூட்டங்கள் நடைபெற உள்ளன. தமிழக அரசுடன் இணைந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்.தமிழகத்தைப் போலவே மற்ற மாநிலங்களிலும் துணைக் குழுக்களின் கூட்டங்களை நடத்த, சுற்றுலா தலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.