வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அலுவலகத்தில் இப்போது பரபரப்பாக பேசப்படுவது தமிழக அரசியல் தலைவர் ஒருவரின் கடிதம்.
![]()
|
இந்த கடிதத்தை எழுதியவர் அ.தி.மு.க.,வின் சீனியர் தலைவர். இவர் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்ததோடு அவருடைய ஆட்சியில் அமைச்சராகவும் இருந்தவர்.அ.தி.மு.க.,வின் இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமிக்கு எதிராக இவர் கடிதம் எழுதியுள்ளாராம். 'பழனிசாமி சரியான தகவல்களை உங்களுக்கு தருவதில்லை; அவர் அ.தி.மு.க., தொடர்பான ஒரு தலைப் பட்சமான தகவல்களை மட்டுமே உங்களுக்கு தெரிவிக்கிறார்.எனவே அவரை நம்ப வேண்டாம்' என அந்த கடிதத்தில் எழுதியுள்ளாராம்.
![]()
|
தான் விரைவில் டில்லி வர இருப்பதாகவும், சந்திக்க நேரம் ஒதுக்குமாறும் அந்த சீனியர் தலைவர் அமித் ஷாவிடம் கேட்டுள்ளார். இந்த கடிதத்திற்கு அமித் ஷா பதில் எழுதுவார் என அவருடைய அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விரைவில் தமிழக வர இருக்கும் அமித் ஷா, அப்போது அந்த அ.தி.மு.க., தலைவரை சந்திக்க நேரம் ஒதுக்குவதாக பதில் போட உள்ளாராம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement