வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ, 'டுவிட்டர்' கணக்கு நம் நாட்டில் அதிரடியாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
![]()
|
மத்திய அரசின் சட்ட விதிகளுக்கும், உள்நாட்டு பாதுகாப்புக்கும் எதிரான விஷயங்களை தெரிவிக்கும் சமூக வலைதள கணக்குகளை முடக்கி வைக்கும்படி, சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இதன்படி, இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்ட சமூக வலைதள கணக்குகள் பல முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நம் அண்டை நாடான பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு நேற்று இந்தியாவில் முடக்கி வைக்கப்பட்டது. இதற்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
![]()
|
பாக்., அரசின் டுவிட்டர் கணக்கு முடக்கி வைக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த ஜூனிலும் அந்த கணக்கு நம் நாட்டில் முடக்கி வைக்கப்பட்டிருந்தது.