என் சாவுக்கு தி.மு.க., நிர்வாகி தான் காரணம்; கடிதம் எழுதி வைத்து பெண் தற்கொலை

Updated : அக் 02, 2022 | Added : அக் 02, 2022 | கருத்துகள் (33) | |
Advertisement
புதுக்கோட்டை : 'என் சாவுக்கு தி.மு.க., நிர்வாகி தான் காரணம். போலீசார் பொய் வழக்கு போட்டு மிரட்டுகின்றனர்' என, கடிதம் எழுதி வைத்து விட்டு, பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் நீலகண்டன், 42; விவசாயி. இவரது மனைவி கோகிலா, 35. புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி
தி.மு.க. நிர்வாகி, கடிதம், பெண் தற்கொலை,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



புதுக்கோட்டை : 'என் சாவுக்கு தி.மு.க., நிர்வாகி தான் காரணம். போலீசார் பொய் வழக்கு போட்டு மிரட்டுகின்றனர்' என, கடிதம் எழுதி வைத்து விட்டு, பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் நீலகண்டன், 42; விவசாயி. இவரது மனைவி கோகிலா, 35. புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி துணை அமைப்பாளராக இருப்பவர் குமார்.இவர்களுக்குள் ஏற்பட்ட நடைபாதை பிரச்னை தொடர்பாக, கடந்த, 20-ம் தேதி, கீரமங்கலம் போலீசார், கோகிலா மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.



போலீஸ் ஸ்டேஷனில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.இந்நிலையில், போலீசார் பொய் வழக்கு போட்டு மிரட்டுவதாக கடிதம் எழுதி வைத்து, கோகிலா நேற்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அவர் கடிதத்தில் எழுதியிருப்பதாவது:தி.மு.க., கட்சியின் அராஜகம். கட்சி பவரை குமார் எங்களிடம் காண்பித்து விட்டார். என் சாவுக்கு குமார் மற்றும் அவரது மனைவி புகனேஸ்வரி தான் காரணம்.போலீஸ் ஸ்டேஷனுக்கு கையெழுத்து போட செல்லும் போதெல்லாம் போலீசார் மிரட்டுகின்றனர்.



latest tamil news


நடைபாதை தொடர்பான வழக்கில், கணவனையும் இணைத்து விட்டதால், பயந்து போய் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.இவ்வாறு அதில் எழுதியுள்ளார்.சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல், போலீசார் அலட்சியம் காட்டுவதாகவும், கோகிலா தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி, உறவினர்கள், கீரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் முன் திரண்டனர்.பா.ஜ., மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் அறந்தாங்கி- பட்டுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தொடர்ந்து, கோகிலாவின் உறவினர்களும், பா.ஜ.,வினரும் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். போலீசார் அவர்களை தடுக்க முயன்றதில், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.செல்வம்அழகப்பன் உட்பட, 10க்கும் மேற்பட்டோர் போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலங்குடி டி.எஸ்.பி., தீபக்ரஜினி, வருவாயத்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.இதையடுத்து, அனைவரும் கலைந்தனர். மறியலால், அறந்தாங்கி -- பட்டுக்கோட்டை சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
07-அக்-202213:54:48 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy பொறுமை அவசியம்.
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
03-அக்-202216:54:41 IST Report Abuse
sankar கொடநாடு சாவுக்கு யாருங்க காரணம் ?
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
02-அக்-202218:41:47 IST Report Abuse
sridhar //////
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X