இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்': பாலியல் சித்ரவதை: 10 வயது சிறுவன் பலி

Updated : அக் 02, 2022 | Added : அக் 02, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
இந்திய நிகழ்வுகள்பாலியல் சித்ரவதை: 10 வயது சிறுவன் பலிபுதுடில்லி-டில்லியில், நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து 10 வயது சிறுவனை பாலியல் ரீதியாக கடுமையாக சித்ரவதை செய்ததை அடுத்து, அச்சிறுவன் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தான்.டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, புதிய சீலாம்பூர் பகுதியைச் சேர்ந்த ௧௦
இன்றைய, கிரைம், ரவுண்ட், அப்


இந்திய நிகழ்வுகள்
பாலியல் சித்ரவதை: 10 வயது சிறுவன் பலி


புதுடில்லி-டில்லியில், நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து 10 வயது சிறுவனை பாலியல் ரீதியாக கடுமையாக சித்ரவதை செய்ததை அடுத்து, அச்சிறுவன் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தான்.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, புதிய சீலாம்பூர் பகுதியைச் சேர்ந்த ௧௦ வயது சிறுவன், அங்குள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த மாதம், இச்சிறுவனின் நண்பர்கள் மூன்று பேர், இவனை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுவன் மறுத்ததால், அவனை செங்கல், இரும்பு கம்பியால் தாக்கியதுடன், அந்தரங்க உறுப்பில் கம்பியை செருகியுள்ளனர்.இதில், அச்சிறுவன் பலத்த காயமடைந்தான்.

இதையடுத்து அவனது பெற்றோர் சமீபத்தில் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின்படி, போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது தான் 'நண்பர்கள் இருவர் மற்றும் ஒரு உறவினர் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து, சிறுவனை பாலியல் சித்ரவதை செய்து தாக்கிஉள்ளனர். 'இதனால், சிறுவன் பலத்த காயமடைந்தான்' என சிறுவனின் தாய் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மூன்று சிறுவர்கள் மீது போலீசார், 'போக்சோ' உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, இருவரை கைது செய்து சிறார் சிறையில் அடைத்தனர். மற்றொரு சிறுவனை தேடி வருகின்றனர்.இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தான்.


மஹாவில் இளைஞர் சுட்டுக் கொலைமும்பை-மஹாராஷ்டிராவில், லால்ஜிபடா என்ற இடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்த நான்கு பேர் மீது, பைக்கில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இதில், ஒருவர் அதே இடத்தில் உயிரிழந்தார்; காயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர் அங்கிட் யாதவ், 26. இவருக்கும், சோனு பாஸ்வான் என்பவருக்கும் இடையே, கிருஷ்ண ஜெயந்தி விழாவின் போது தகராறு ஏற்பட்டுள்ளது. 'இதையடுத்து, சோனு பஸ்வான் அங்கிட் யாதவை கொன்றிருக்க வேண்டும்' என, போலீசார் தெரிவித்தனர். சோனு பாஸ்வான் மற்றும் அவருடன் வந்தவர் மீது கொலை வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.


நடிகர் அன்னு கபூரிடம் ரூ.4.36 லட்சம் மோசடிமும்பை-பாலிவுட் நடிகர் அன்னு கபூர் வங்கி கணக்கில் இருந்து, 4.36 லட்சம் ரூபாய் 'ஆன்லைன்' வாயிலாக மோசடி செய்து எடுக்கப் பட்டது. நடிகர் அன்னு கபூருக்கு, சமீபத்தில் தனியார் வங்கியில் இருந்து பேசுவதாக அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர், வங்கி கணக்கு விபரங்களை புதுப்பிக்க வேண்டும் எனக்கூறி தகவல்களை பெற்றுஉள்ளார்.


latest tamil newsஇதையடுத்து, நடிகரின் வங்கி கணக்கில் இருந்து, 4.36 லட்சம் ரூபாய் இரு வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டன. இதை, வங்கி மேலாளர், அன்னு கபூரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். உடனே, அவர், போலீசாரிடம் புகார் தெரிவித்தார். மேலும், பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கிகளையும் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். இதையடுத்து, இரண்டு கணக்குகளும் முடக்கப்பட்டு, 3.08 லட்சம் ரூபாய் திரும்பப் பெறப்பட்டது.

இது குறித்து வழக்கு பதிந்த போலீசார், 'ஆன்லைன் மோசடியாளரை பிடிக்க விசாரணை நடத்தப்படுகிறது' என்றனர். அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் நடித்த ஹம், அனில் கபூர் நடித்த தேஜாப் உள்ளிட்ட பல ஹிந்திபடங்களில் அன்னு கபூர் நடித்துஉள்ளார்.


தமிழக நிகழ்வுகள்
மாணவியிடம் சீண்டல்: உதவி ஹெச். எம்., கைதுமாங்காடு--திருவேற்காடில், பள்ளி மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூடுதல் தலைமை ஆசிரியரை, போலீசார் கைது செய்தனர்.

திருவேற்காடில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், கூடுதல் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ராஜா முத்தெழில், 49. இவரதுவகுப்பில் பயிலும் மாணவியரிடம், கையை பிடித்து போர்டில் எழுத வைப்பதும், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், சில மாணவியர் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர்.இது குறித்து, சில நாட்களுக்கு முன், போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து, ராஜா முத்தெழிலை, நேற்று முன்தினம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


உண்டியல் திருடியவருக்கு 2 ஆண்டு ஜெயில்


தேவகோட்டை, : தேவகோட்டை அருகே கற்படையில் உள்ள அய்யனார் கோவிலில் 2020ல் உண்டியலை உடைத்து திருடர்கள் பணத்தை திருடி சென்றனர். இத்திருட்டு தொடர்பாக கல்லல் அருகே பொங்கத்தலையைச் சேர்ந்த பாண்டி மகன் முத்து 47.வை வேலாயுதம் பட்டினம் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தேவகோட்டை கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் மாரிமுத்து உண்டியல் திருடிய முத்துவிற்கு இரண்டு ஆண்டு ஜெயில் தண்டனையும் மற்றும் ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


என் சாவுக்கு தி.மு.க., நிர்வாகி தான் காரணம்! கடிதம் எழுதி வைத்து பெண் துாக்கிட்டு தற்கொலை


புதுக்கோட்டை;'என் சாவுக்கு தி.மு.க., நிர்வாகி தான் காரணம். போலீசார் பொய் வழக்கு போட்டு மிரட்டுகின்றனர்' என, கடிதம் எழுதி வைத்து விட்டு, பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் நீலகண்டன், 42; விவசாயி. இவரது மனைவி கோகிலா, 35. புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி துணை அமைப்பாளராக இருப்பவர் குமார்.இவர்களுக்குள் ஏற்பட்ட நடைபாதை பிரச்னை தொடர்பாக, கடந்த, 20-ம் தேதி, கீரமங்கலம் போலீசார், கோகிலா மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். போலீஸ் ஸ்டேஷனில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.


latest tamil newsஇந்நிலையில், போலீசார் பொய் வழக்கு போட்டு மிரட்டுவதாக கடிதம் எழுதி வைத்து, கோகிலா நேற்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அவர் கடிதத்தில் எழுதியிருப்பதாவது:தி.மு.க., கட்சியின் அராஜகம். கட்சி பவரை குமார் எங்களிடம் காண்பித்து விட்டார். என் சாவுக்கு குமார் மற்றும் அவரது மனைவி புவனேஸ்வரி தான் காரணம். போலீஸ் ஸ்டேஷனுக்கு கையெழுத்து போட செல்லும் போதெல்லாம் போலீசார் மிரட்டுகின்றனர். நடைபாதை தொடர்பான வழக்கில், கணவனையும் இணைத்து விட்டதால், பயந்து போய் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.இவ்வாறு அதில் எழுதியுள்ளார்.சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல், போலீசார் அலட்சியம் காட்டுவதாகவும், கோகிலா தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி, உறவினர்கள், கீரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் முன் திரண்டனர்.

பா.ஜ., மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் அறந்தாங்கி- பட்டுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கோகிலாவின் உறவினர்களும், பா.ஜ.,வினரும் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். போலீசார் அவர்களை தடுக்க முயன்றதில், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. செல்வம்அழகப்பன் உட்பட, 10க்கும் மேற்பட்டோர் போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலங்குடி டி.எஸ்.பி., தீபக்ரஜினி, வருவாயத்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, அனைவரும் கலைந்தனர். மறியலால், அறந்தாங்கி -- பட்டுக்கோட்டை சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வழிப்பறி செய்த தந்தை மகன் கைது: ரூ. 33 லட்சம், 24 சவரன் நகை மீட்பு


திருப்பூர்:தாராபுரத்தில் காரை வழிமறித்து ரியல் எஸ்டேட் வர்த்தகரை தாக்கி வழிப்பறி செய்த வழக்கில், தந்தை, மகனை போலீசார் கைது செய்து, 33 லட்சம் ரூபாய், 24 சவரன் நகையை மீட்டனர்.சென்னையை சேர்ந்தவர் பாஸ்கரன், 52. ரியல் எஸ்டேட் வர்த்தகர். கடந்த, 29ம் தேதி சென்னையில் இருந்து பொள்ளாச்சிக்கு தனது காரில், 'ஆக்டிங்' டிரைவர் பரத், 22 என்பவருடன் சென்று கொண்டிருந்தார்.


latest tamil newsதிருப்பூர் மாவட்டம், மூலனுார் அருகே திடீரென டூவீலரில் வந்த, முகமூடி அணிந்த ஒருவர் காரை வழிமறித்தார். அந்த நபர், காரில் இருந்த இருவரையும் தாக்கி, 33 லட்சம் ரூபாய், 24 சவரன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்றார். காயமடைந்த, இருவரும் பொள்ளாச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.எஸ்.பி., செஷாங் சாய் உத்தரவின்படி, மூலனுார் போலீசார் விசாரித்தனர். இதுதொடர்பாக, டிரைவர் பரத், தந்தை குமார், 47 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.போலீசார் கூறுகையில், 'பாஸ்கரன், விவசாய பூமி விற்பனை தொடர்பாக, பொள்ளாச்சிக்கு வந்து சென்றார்.

இது தொடர்பாக, பல இடங்களை குமார் காட்டி வந்தார். மகன் பரத்தை, 'ஆக்டிங்' டிரைவராக அவரிடம் வேலைக்கு சேர்த்து விட்டார். பாஸ்கரனிடம் பணப்புழக்கம் அதிகம் இருப்பது குறித்து, பரத் தனது தந்தையிடம் கூறினார். இருவரும் சேர்ந்து, பணத்தை வழிப்பறி செய்ய திட்டமிட்டனர். சென்னையில் இருந்து பணம், நகையோடு பொள்ளாச்சிக்கு வருவது குறித்து மகன், தந்தைக்கு தகவல் அளித்தார்.சந்தேகம் வராமல் இருக்க முகத்தை துணியால் மூடி காரை வழிமறித்த குமார், இருவரையும் தாக்கி, பணம், நகையை பறித்து சென்றார். பாஸ்கரனுக்கு, பரத் மீது சந்தேகம் ஏற்படவில்லை. விசாரணையில், இது அம்பலமானது. தந்தை, மகன் கைது செய்யப்பட்டு, பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டது' என்றனர்.


சூதாடிய 10 பேர் கைதுதிருப்பூர்: வெள்ளகோவில் அருகே ஓலப்பாளையத்தில் முறைகேடாக சூதாட்ட கிளப் நடப்பது தெரிந்தது. அங்கு சென்ற போலீசார், சீட்டாட்டத்தில் ஈடுபட்ட, முத்துசாமி, 67, சாமிநாதன், 60, சேமலையப்பன், 61, பாலுசாமி, 49, சந்திரன், 34, ராஜன், 45, விஜயகுமார், 43, ராஜேஷ், 44, முத்தீஸ்வரன், 28, கார்த்தி, 30 ஆகிய, பத்து பேரை போலீசார் கைது செய்தனர். 10 ஆயிரம் ரூபாய், ஆறு டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.


ரூ.14.71 கோடி சிக்கிய வழக்கில் நால்வர் கைதுவேலுார்:'டோல்கேட்'டில், 14.71 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா, கோவிந்தம்பாடி சோதனைச் சாவடியில், சில நாட்களுக்கு முன் நள்ளிரவில், நான்கு பேர் கும்பல் ஒரு காரிலிருந்து லாரிக்கு பண்டல்களை மாற்றிக் கொண்டிருந்தது. ரோந்து போலீசார் நான்கு பேரையும் பிடித்து, பள்ளிகொண்டா போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரித்தனர்.


latest tamil newsபண்டல்களில், 2,000, 500, 200, 100 ரூபாய் நோட்டுக்களாக மொத்தம், 14 கோடியே 70 லட்சம் ரூபாய் இருந்தது.பிடிபட்டவர்கள் கேரள மாநிலம், கோழிக்கோடு நாசர், 41, சர்புதீன், 27; சென்னை பிராட்வே நிசார் அகமது, 33; மதுரை, அங்காடிமங்கலம் வாசிம் அக்ரம், 19, என்பதும் தெரிந்தது. பிராட்வே, மண்ணடியிலிருந்து திருவனந்தபுரத்துக்கு ஹவாலா முறையில் கணக்கு காட்டாமல் பணத்தை கொண்டு சென்றதாகவும், அதற்கு கூலியாக, 10 லட்சம் ரூபாய் பெற்றதாகவும் தெரிவித்தனர்.

விசாரணையில் நான்கு பேரும் போலீசாரை மிரட்டியுள்ளனர்.இதையடுத்து, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது, மிரட்டியது, உரிய ஆவணமின்றி பணத்தை எடுத்துச் சென்றது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்து, நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.போலீசார் கூறுகையில், 'பிடிபட்ட பணம் வேலுார் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. பிடிபட்டவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது. வருமான வரித்துறை விசாரணையும் நடக்கிறது' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
02-அக்-202219:28:45 IST Report Abuse
a natanasabapathy Thiraavida katchikalin aatharavu iruppathaal ivarkal thairiyamaaka hawala PanAm kadaththalil idupadukinranar. Kadumaiyaaka thandikkappada vendum
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
02-அக்-202214:24:54 IST Report Abuse
Vena Suna பாலியல் சித்ரவதை: 10 வயது சிறுவன் பலி : செய்தவர்களுக்கு மரண தண்டனை வேண்டும். எல்லோர் முன்னிலையிலும் தலை துண்டிக்கப்பட்ட வேண்டும் சில முஸ்லீம் நாடுகளில் செய்வது போல.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
02-அக்-202212:27:42 IST Report Abuse
Mohan போதும் போதும், லிஸ்ட் பெருசாகிட்டே போவுதே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X